For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாதுகாவலரை போதையாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பித்த கைதிகள்

By BBC News தமிழ்
|

கம்போடிய தலைநகர் பொங்கொட்டாவிலுள்ள அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட சிறையிலிருந்த இரண்டு கைதிகள், அங்கிருந்த பாதுகாவலருக்கு மதுபானம் கொடுத்ததுடன், அவரே மேலும் மதுபானம் வாங்கி வருவதற்கு சிறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கும் வகையில் அவரை சமரசம் செய்துவிட்டு தப்பியோடினர்.

சிறையிலிருந்து வெளியே சென்ற கைதிகள் மீண்டும் திரும்பவே இல்லை என்பதால் போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.

லா பிக்கோட்டா சிறைச்சாலையில் கைதிகளை வெளியே செல்ல அனுமதித்த காவலாளரின் சக ஊழியர்கள் அவர் மதுபானம் அருந்தியிருந்தது சுவாசிக்கும்போது தெரிந்ததாகவும், ஆனால் மது அருந்தியிருந்தார்களா என்பதை அறிவதற்கான மூச்சுக்காற்று பரிசோதனைக்கு மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

அடிக்கடி பரிசோதனைகள் நடத்தப்பட்டாலும், ஒருவகை மதுபானம் சிறைச்சாலையின் உள்ளேயே தயாரிக்கப்படுவதால் இது வழக்கமான ஒன்று என்று சிறைச்சாலையின் மேலாளர் தெரிவித்துள்ளார்.

2003ஆம் ஆண்டு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதற்காக 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஃபார்க் கிளர்ச்சியாளரான ஜொன் குடீரெரெஸ் ரிக்கோன் மற்றும் சமீபத்தில் ஃபார்க் கிளர்ச்சியாளர்கள் குழுவில் இருந்து விலக்கப்பட்டவரும், திருட்டு வழக்கில் தண்டனைக்காக காத்திருப்பவருமான ஆல்மோட்டோ வர்கஸ் ஆகிய இருவரும்தான் தப்பி சென்ற கைதிகளாவர்.

சிறைச்சாலை அல்லது அதன் கதவுகளுக்கு எந்தவிதமான சேதத்தையும் கண்டறிய முடியவில்லை எனவும், அதனால் அவர்கள் தப்பிப்பதற்கு உதவியாக ஒரு காவலாளரை சந்தேகிப்பதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
Two prisoners have escaped from a maximum security jail in the Colombian capital, Bogotá, by getting a guard drunk and convincing him to let them go to go buy more alcohol.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X