மார்க் வேணுமா.. அப்படீன்னா என்னோடு வா.. மாணவர்களை அனத்திய ஆசிரியைக்கு 40 ஆண்டு சிறை!
தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற வேண்டும் எனில் தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என்று மாணவர்களை கட்டாயப்படுத்திய ஆசிரியை கைதானார்.
Recommended Video

கொலம்பியா: தேர்வில் அதிக மதிப்பெண் பெறவேண்டும் எனில் தன்னுடன் உறவில் ஈடுபட வேண்டும், தனது கவர்ச்சி படங்களை பார்க்க வேண்டும் என்று மாணவர்களை நிர்பந்தப்படுத்திய கொலம்பியா நாட்டு ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கொலம்பியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. யொகாஸ்டா என்ற அந்த ஆசிரியை, கொலம்பியா நாட்டின் 2வது பெரிய நகரான மெடலினிலுள்ள பள்ளியில் ஆசிரியையாக பணி செய்து வந்தார்.
அந்த பள்ளியில் படிக்கும் 16,17வயது மாணவர்களுக்கு தனது கவர்ச்சி புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைப்பார் யொகாஸ்டா. அந்த படங்களை பார்ப்பதோடு மட்டுமல்லாது தன்னுடைய ஆசைக்கும் இணங்க வேண்டும் என்றும் வற்புறுத்தி வந்துள்ளார் ஆசிரியை.

மாணவர்களுடன் உறவு
நீண்ட நாட்களாக இந்த விசயம் வெளியே தெரியாமல் இருந்துள்ளது. அதிக மதிப்பெண் வேண்டுமென்றால் தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என்று பல மாணவர்களை வற்புறுத்தியுள்ளார் யொகாஸ்டா.

ஆசிரியை பாலியல் தொந்தரவு
வாட்ஸ் அப் மூலம் கவர்ச்சி படங்களை அனுப்பியதோடு மாணவர்களை சிறப்பு வகுப்பு என்று கூறி வீட்டுக்கு அழைத்து பாலியல் உறவில் ஈடுபட்டதாக ஆசிரியை மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

செல்போனில் ஆபாச படம்
கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை இதுபோல் 40 மாணவர்களிடம் தவறாக நடந்துள்ளார் ஆசிரியை. இந்த நிலையில் ஒரு மாணவனின் செல்போனில் ஆசிரியையின் ஆபாசப்படங்களைப் பார்த்த தந்தை ஒருவர் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து உடனடியாக ஆசிரியை மீது புகார் அளித்தார்.

சிறையில் ஆசிரியை
காவல்துறையினர் ஆசிரியையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆசிரியை மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கொலம்பியா நீதிமன்றம் உத்தரவிட்டது.

கணவரும் பிரிந்தார்
ஆசிரியை யொகாஸ்டாவின் கணவர் தனது மனைவியின் உண்மை சொரூபத்தை உணர்ந்து உடனடியாக விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார். பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவர்களை மிரட்டி பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் கொலம்பியா நாட்டு ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications