எங்கள் நாட்டிற்குள் வரக்கூடாது.. லிஸ்டில் இந்தியாவும் இருக்கு.. சவுதி அரேபியா அதிரடி முடிவு
சவுதி: இந்தியா உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளை சேர்ந்தவர்கள், சவுதி அரேபியாவிற்குள் வருவதற்கு, அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் பீதிதான் இதற்கு காரணம்.
Recommended Video
கடந்த 14 நாட்களில், ஆப்கானிஸ்தான், அஜர்பைஜான், சீனா, சீன தைபே, ஹாங்காங், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ஈராக், இத்தாலி, ஜப்பான், கஜகஸ்தான், தென் கொரியா லெபனான், மக்காவோ, மலேசியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், சோமாலியா, சிரியா, தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான், வியட்நாம், யேமன் ஆகிய நாடுகளில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் சவுதிக்குள் நுழைய முடியாது.
இதேபோல, விமான சிப்பந்திகளும், சவுதி அரேபியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை சவுதி அரேபியா நாட்டின் குடிமக்களுக்கு பொருந்தாது.

வளைகுடா நாடுகள்
வளைகுடா கூட்டமைப்பு (கல்ப்) நாடுகளைச் சேர்ந்தவர்கள் இனி தேசிய அடையாள அட்டையுடன் சவுதி அரேபியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் கண்டிப்பாக தங்கள் பாஸ்போர்ட்டுடன் வந்தாக வேண்டும். சவூதி அரேபியாவை சேர்ந்தவர்கள், மீண்டும் தாய்நாடு திரும்பி வரும்போது, தேசிய அடையாள அட்டைகளைப் பயன்படுத்திக் கொண்டு வந்து கொள்ளலாம். அவர்களுக்கு பாஸ்போர்ட் விதிமுறை பொருந்தாது.

இந்தியர்கள்
ஆப்கானிஸ்தான், அஜர்பைஜான், மெயின்லேண்ட் சீனா, சீன தைபே, ஹாங்காங், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ஈராக், இத்தாலி, ஜப்பான், கஜகஸ்தான், கொரியா (பிரதி), லெபனான், மக்காவோ, மலேசியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், சோமாலியா, சிரியா, தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான், வியட்நாம் அல்லது யேமன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் சுற்றுலா விசா எடுத்திருந்தாலும், சவுதி அரேபியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

புனித யாத்திரை
உம்ராவிற்காக வருவோர் அல்லது நபிகள் நாயகம் நினைவிடம் வருகை தரும் ஆன்மீக பயணிகள் சவுதி அரேபியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் வலைத்தளத்தின் மூலம் பெறப்பட்ட ஹஜ் மற்றும் உம்ரா அனுமதியுடன் வரக்கூடிய, பஹ்ரைன், குவைத், ஓமான், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டினருக்கு மட்டும் இந்த தடை பொருந்தாது. தேவைப்பட்டால் விமான ஊழியர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

சவுதியிலும் பாதிப்பு
ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்களை ஈர்க்கும் இஸ்லாமிய புனித தலங்களின் தாயகம் சவுதி அரேபியா. எனவே அங்கு முன்னெச்சரிக்கை மிக அவசியமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, கொரோனா வைரஸ் தொற்று சவுதியிலும் பரவியுள்ளது.
ஈரானுக்குச் சென்று திரும்பிய ஒரு சவுதி நபருக்கு, இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று சவுதி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications