நேரமாக நேரமாக பரவும்.. ஜப்பான் கப்பலில் மேலும் 10 பேருக்கு கொரோனா.. நடுக்கடலில் திக் திக் நிமிடங்கள்
Recommended Video
டோக்கியோ; கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கப்பலில் உள்ள மேலும் 10 பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஜப்பானில் கப்பல் ஒன்று நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கார்னிவல் ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் ஆகும் இது.
ஜப்பான் வந்த அந்த கப்பலில் இருந்த ஒருவருக்கும் வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் 80 வயது முதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கப்பல் ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்துள்ளது.

எப்படி கப்பல்
இந்த கப்பலில் 3500 பேர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டயமண்ட் பிரின்சஸ் என்பது இந்த கப்பலின் பெயர். முதலில் ஒருவருக்குதான் இந்த வைரஸ் தாக்குதல் இருந்தது. நேற்று இந்த வைரஸ் 10 பேருக்கு பரவியது. இன்று இன்னும் 10 பேருக்கு பரவி உள்ளது. மொத்தம் 21 பேருக்கு வைரஸ் தாக்குதல் உள்ளது. இவர்கள் எல்லோரும் அங்கே தனி அறையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

எல்லோரும்
ஆனாலும் இந்த வைரஸ் எதோ ஒரு வகையில் எல்லோருக்கும் பரவி வருகிறது. நேரம் ஆகஆக இவர்களுக்கு வைரஸ் தாக்குதல் பரவிக்கொண்டே இருக்கும். உள்ளே இருப்பவர்களுக்கு அங்கு இருக்கும் ஊழியர்கள்தான் உணவு கொடுக்க வேண்டும். அதனால் எப்படியாவது ஒருவரை ஒருவர் தொட வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அதேபோல் கப்பலில் கண்டிப்பாக ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு எளிதாக வைரஸ் பரவ முடியும்.

நேரம் ஆனது
இதனால் அங்கு நேரம் ஆகஆக வைரசால் பலர் தாக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க அங்கு போதிய மருந்து வசதிகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நோய் தொடுதல் மூலம் பரவக்கூடியது ஆகும். அதேபோல் நோய் தாக்குதல் உள்ளவர்கள் தொட்ட பொருளை மற்றவர் தொட்டாலும் இந்த வைரஸ் பரவும். ஜப்பான் மருத்துவர்கள் கரையில் இருந்து சென்று அங்கு சிகிச்சை அளித்து திரும்பி வருகிறார்கள்.

வாய்ப்பில்லை
தற்போது அந்த கப்பல் நடுக்கடலில் தத்தளித்து வருகிறது. இந்த கப்பலை கண்டிப்பாக தங்கள் எல்லைக்குள் விட முடியாது என்று ஜப்பான் கூறிவிட்டது. எங்களால் இந்த வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள முடியாது.அதனால் நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம் என்றுள்ளனர். அவர்களால் தற்போது திரும்பியும் போக முடியாது. இதனால் 3500 பேரின் நிலை என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications