சீன அரசு மறைக்கிறது.. கொரோனா பற்றி எச்சரித்த 2 பேர் மாயம்.. 2 மாதமாக காணவில்லை.. வலுக்கும் சந்தேகம்!
சீனாவில் கொரோனா பாதிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்த இரண்டு பேர் திடீர் என்று காணாமல் போனது அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பாதிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்த இரண்டு பேர் திடீர் என்று காணாமல் போனது அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் காணாமல் போய் இரண்டு மாதம் ஆகியும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
Recommended Video
சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சமயத்தில் இருந்து அது தொடர்பாக பல உண்மைகளை சீனா மறைத்தது. கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பதை சீனா தொடர்ந்து மறைத்து வந்தது. அதேபோல் சீனாவில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை குறித்து தொடர்ந்து அந்நாட்டு அரசு மௌனம் காத்தது.
மேலும் வெளிநாடுகளுக்கு இந்த வைரஸ் பரவ தொடங்கிய போது அது தொடர்பான எச்சரிக்கையை சீனா யாருக்கும் அளிக்கவில்லை. தங்கள் நாட்டுக்கு உள்ளேயும் கூட சீனா தொடர்ந்து ரகசியம் காத்து வந்தது.

வெளியிட்டார்
இந்த நிலையில் சீனாவில் கொரோனா பரவ தொடங்கிய போது அந்நாட்டை சேர்ந்த மனித உரிமை போராளி மற்றும் வழக்கறிஞர் சென் கொய்ஷி முக்கியமான வீடியோ ஒன்றை வெளியிட்டார். கொரோனா எப்படி பரவும் என்பதை விளக்கி வீடியோ வெளியிட்டார். அதேபோல் கொரோனாவிற்கு சீனாவில் எத்தனை பேர் சிகிச்சை அளிக்கிறார்கள். எத்தனை பேர் பலியாகி உள்ளனர். சீன அரசு எதை எல்லாம் மறைக்கிறது என்பதை குறித்து வீடியோவில் குறிப்பிட்டு இருந்தார்.

இவர் வெளியிட்ட வீடியோ
சீனாவில் இருக்கும் மருத்துவமனைக்குள் சென்று அங்கிருக்கும் நிலவரத்தை நேரடியாக வீடியோவாக வெளியிட்டார். இந்த நிலையில் இந்த வீடியோ வெளியிட்டு சில நாட்களில் கடந்த ஜனவரி 29ம் தேதி இவர் மாயம் ஆனார். இவரின் சமூக வலைதள கணக்கு முடக்கப்பட்டது. அதன்பின் இவர் எங்கே போனார் எங்கே போனார் என்பது தெரியவில்லை. இவரின் குடும்பம் அப்போதில் இருந்து இவரை தேடி வருகிறது.

அடுத்த நபர் மாயம்
இவரை தொடர்ந்து இன்னொரு மனித உரிமை செயல்பாட்டாளர் மற்றும் மருத்துவர் பாங் என்ற நபர் கொரோனா குறித்தும், அதன் இயல்பு குறித்தும் வீடியோ வெளியிட்டார். அதேபோல் வுஹன் மருத்துவமனையில் உடல்கள் மறைக்கப்படுகிறது என்று குவியல் குவியலாக இருந்த பிணங்களை வீடியோ எடுத்து வெளியிட்டார். அதன்பின் இதேபோல் பிப்ரவரி 4ம் தேதி இவர் வீடியோ வெளியிட்டு கொண்டு இருந்த போதே அங்கு மாஸ்க் அணிந்து வந்த நபர்கள் அவரை கடத்தி சென்றனர்.

எங்கே போனார் என்று தெரியாது
அவரை அப்போது வந்து அழைத்து சென்ற நபர்கள் போலீசாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதன்பின் இவர் எங்கே போனார், உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று இன்னும் தெரியவில்லை. இவர்கள் இருவருக்கும் கொரோனா குறித்த நிறைய ரகசியங்கள் தெரிய வாய்ப்பு உள்ளது. அதனால்தான் இவர்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். இதேபோல் அங்கு பல உயர் அதிகாரிகள் திடீர் திடீர் என்று மாயமாகி வருகிறார்கள். இதற்கு பின் அரசின் சதி இருக்கிறது என்று பலர் புகார் வைக்கிறார்கள்.

சீனா தொடர்ச்சி
கொரோனா குறித்த விஷயங்களை பேசும் யாராக இருந்தாலும் அவர்களை சீன அரசு கடுமையாக முடக்குகிறது. அதேபோல் கொரோனா குறித்து செய்யும் அனைத்து ஆராய்ச்சி கட்டுரைகளை முழுதாக சீன அரசு ஆராய்ச்சி செய்த பிறகே வெளியிட வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.கொரோனாவின் தோற்றம் குறித்த ஆராய்ச்சி கட்டுரைகள் எதையும் வெளியிட கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா எப்படி தோன்றியது என்பதில் தொடர்ந்து மர்மம் நிலவி வருகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications