15 நாள் தனி அறையில் சோதனை.. கடும் கட்டுப்பாடு.. சீனாவின் வுஹனிலிருந்து இன்று இந்தியா வரும் 400 பேர்
சீனாவின் வுஹன் நகரத்தில் இருந்து டெல்லிக்கு கொண்டு வரப்படும் இந்தியர்கள் 15 நாட்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
Recommended Video
பெய்ஜிங்: சீனாவின் வுஹன் நகரத்தில் இருந்து டெல்லிக்கு கொண்டு வரப்படும் இந்தியர்கள் 15 நாட்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
கொரோனா வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும்.இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது. சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அங்கு இதுவரை 205 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி இருக்கிறார்கள். அதேபோல் இதுவரை 7900 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது.

டெல்லி செல்கிறது
இந்த நிலையில் சீனாவில் இருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து சீனாவிற்கு ஏர்இந்தியா விமானம் அனுப்பப்பட உள்ளது. இதற்காக மும்பையில் இருந்த போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 400 பேர் வரை பயணிக்கலாம். முக்கியமான நபர்கள் இந்த விமானத்தில் கொண்டு வரப்பட உள்ளனர். பெரும்பாலும் பெண்கள் இதில் அதிகம் இடம்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்து.

சீனா எங்கே
இந்த விமானம் சீனாவில் நோய் பாதிக்கப்பட்டு இருக்கும் வுஹன் நகரத்திற்கு அனுப்பப்பட உள்ளது. இதில் 15 இந்திய அதிகாரிகள் செல்ல உள்ளனர். பயணிகள் சோதித்து விமானத்தில் ஏற்றுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வுஹன் நகரத்திற்கு உலக நாடுகள் எல்லாம் விமான போக்குவரத்தை நிறுத்திவிட்டது. இந்தியா மட்டும்தான் விமான போக்குவரத்தை இந்த மீட்பு பணிக்காக மேற்கொள்கிறது. இதை மிகவும் முக்கியமான முடிவு என்று கூறுகிறார்கள்.

என்ன செய்வார்கள்
இந்த நிலையில் இந்தியா கொண்டு வரப்பட்ட பின் இவர்கள் எல்லோரும் 15 நாட்கள் தனியாக வைக்கப்படுவார்கள். முதலில் மருத்துவ பரிசோதனை இவர்களுக்கு செய்யப்படும். அதன்பின் 15 நாட்கள் இவர்கள் தினமும் கண்காணிக்கப்படுவார்கள். இவர்களுக்கு வைரஸ் ஏற்படவில்லை. வைரஸ் பாதிப்பு உண்டாகவில்லை என்பது உறுதியான பின்தான் இவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். தனி அறையில் இது செய்யப்படும். பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கேரளா
ஏற்கனவே சீனாவில் படிக்கும் கேரளாவை சேர்ந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது இதுவே முதல்முறை. கேரளா திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது. கேரளாவில் 4 பேருக்கு இதற்கான அறிகுறிகள் இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இந்த 4 பேரை தற்போது தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications