6 தியரி.. கொரோனா தோன்றியது எப்படி?.. சீனாவுக்கு மட்டும் தெரிந்த ரகசியம்.. நெருக்கும் உலக நாடுகள்!

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து மொத்தம் 6 வகையான தியரிக்கள், சந்தேங்கங்கள் பரவிய வண்ணம் இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து மொத்தம் 6 வகையான தியரிக்கள், சந்தேகங்கள் பரவிய வண்ணம் இருக்கிறது. இந்த வைரஸ் குறித்து இன்னும் பல விஷயங்களை சீனா தொடர்ந்து மறைத்து வருகிறது.

Recommended Video

    பரிசோதனை கூடத்திலிருந்து லீக்கானதா கொரோனா?.. நடந்தது என்ன?

    கொரோனா வைரஸ் காரணமாக 2,258,516 பேர் உலகம் முழுக்க பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 154,371 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 710,272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 37 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.

    இந்த நிலையில் கொரோனா வைரஸ் எங்கு தோன்றியது என்பது குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக பலர் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர். மொத்தம் 6 விதமான தியரிகள் இந்த வைரஸின் தோற்றம் குறித்து பரவி வருகிறது.

    தியரி 1

    தியரி 1

    கொரோனா உருவானதாக முதலில் வெளியான விஷயம் அல்லது தியரி என்று பார்த்தால் அது வுஹன் மீன் மார்க்கெட்தான். வெட் மார்க்கெட் என்று அழைக்கப்படும் இந்த வுஹன் மார்க்கெட்டில் விற்கப்பட்ட வௌவால் சூப் மூலம் கொரோனா பரவி இருக்கலாம். இதில் வௌவால் சிறுநீர் கலந்து இருந்தது. இதை யாராவது குடித்து இருக்கலாம். அதன் மூலம் கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்று கூறப்பட்டது. சீனா இந்த தகவலில் இப்போதும் உறுதியாக இருக்கிறது.

    தியரி 2

    தியரி 2

    அடுத்த விஷயம் என்றால் அதே வுஹன் மார்க்கெட்தான். ஆனால் வௌவாலுக்கு பதில் எறும்பு தின்னி மூலம் கொரோனா பரவி இருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த எறும்பு தின்னிகள் உலகம் முழுக்க பல நோய்கள் பரவ காரணம் ஆகும். இந்த எறும்பு தின்னிகள் மூலம் சமைக்கப்பட்ட உணவுகள் எதிலாவது கொரோனா தோன்றி இருக்கலாம். அப்படி இந்த கொரோனா வைரஸ் உருவாகி அதை சாப்பிட்ட மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

    தியரி 3

    தியரி 3

    மூன்றாவது தியரி கொஞ்சம் வித்தியாசமானது. அதாவது இந்த வைரஸ் சீனா மூலம் பயோ வாருக்காக உருவாக்கப்பட்டு இருக்கும். வுஹனில் இருக்கும் வைராலஜி சோதனை மையத்தில் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டு இருக்கும். அங்கிருந்து இந்த வைரஸ் வேண்டும் என்றே அமெரிக்கா போன்ற நாடுகளை அழிக்கும் வகையில் வெளியேற்றப்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இது அதீத ஹாலிவுட் கற்பனை போல இருந்தாலும் பலர் இந்த குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.

    தியரி 4

    தியரி 4

    அடுத்த தியரி, இந்த வைரஸ் பயோ ஆயுதமாக உருவாக்கப்பட்டு இருக்காது. ஆனால் இதை வைத்து சீனா ஆராய்ச்சி செய்து வந்தது. வுஹனில் இருக்கும் வைராலஜி சோதனை மையத்தில் இதை வைத்து ஆராய்ச்சி செய்தது. அங்கிருந்து இந்த வைரஸ் கசிந்து இருக்கலாம். அங்கு பணியாற்றிய நபர்கள் யார் மூலமாவது இந்த வைரஸ் கசிந்து இருக்கலாம். அந்த வுஹனில் இருக்கும் வைராலஜி சோதனை மையத்தை சேர்ந்தவர்தான் பேஷண்ட் 0 ஆக இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    தியரி 5

    தியரி 5

    இதில் ஐந்தாவது தியரி கொஞ்சம் அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் இருக்கிறது. அதாவது உலகில் மருத்துவ துறையை கட்டுப்படுத்தும் சில கோடீஸ்வரர்கள் இந்த வைரஸை உருவாக்கி, தங்கள் லாபத்திற்காக பரப்பி விட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். பில்கேட்ஸ் மீது ஏற்கனவே இது தொடார்பாக அதிபர் டிரம்பின் நண்பர் ரோஜர் புகார் அளித்துள்ளார். இது போல பலர் மீது இப்படி கொரோனாவை உருவாக்கியதாக புகார் உள்ளது.

    கடைசி தியரி

    கடைசி தியரி

    கடைசியாக இந்த வைரஸ் இயற்கையாக உருவாகி பரவி இருக்கலாம். இது வுஹனில் இருந்துதான் என்றல்லாமல் வேறு எங்காவது தோன்றி பின் வுஹன் வந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள். சீனாவை சேர்ந்த சில மருத்துவர்கள் இந்த தகவலை தெரிவிக்கிறார்கள். சீனா இந்த கருத்தை ஆதரிக்க தொடங்கி உள்ளது. அதேபோல் இந்த வைரஸ் இயற்கையாகத்தான் உருவானது என்பதற்கு நிறைய ஜீன் ஆதாரங்கள் இருக்கிறது.

    யாருக்கும் தெரியவில்லை

    யாருக்கும் தெரியவில்லை

    ஆனால் இந்த வைரஸ் எப்படி உருவானது என்ற தியரி எதையும் உறுதியாக நிரூபிக்கும் முழு ஆதாரங்கள் எதுவும் இல்லை. யாரும் இது தொடார்பாக ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. இந்த வைரஸ் குறித்து அதிகம் தெரிந்த சீனா இது தொடர்பாக இன்னும் வாயை திறக்கவில்லை. கொரோனா குறித்த உண்மைகள் பலவற்றை சீனா இன்னமும் மறைத்துதான் வருகிறது.சீனாவிற்கு மட்டுமே கொரோனா குறித்த உண்மைகள் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலக நாடுகள் நெருக்க தொடங்கி உள்ளது

    உலக நாடுகள் நெருக்க தொடங்கி உள்ளது

    சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் குறித்து உலக நாடுகள் கேள்வி எழுப்பி தொடங்கி உள்ளது. முதலில் அமெரிக்கா மட்டும்தான் சீனா குறித்த கேள்விகளை எழுப்பியது. சீனா மீது புகார் வைத்தது. தற்போது ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் லேசாக கேள்வி கேட்க தொடங்கி உள்ளது. வரும் நாட்களில் சீனாவிற்கு உலக நாடுகளிடம் இருந்து அழுத்தம் அதிகரிக்கும் என்கிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+