For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ஏ' பிளட் க்ரூப் இருந்தால் சிக்கல்.. கவனம்.. யாருக்கு கொரோனா எளிதாக தாக்கும்?.. ஆராய்ச்சி முடிவு!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் 'ஏ' ரத்த வகை கொண்டவர்களைத்தான் அதிகம் தாக்குகிறது என்று சீனாவில் செய்யப்பட்ட கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது.

Recommended Video

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 139 ஆக உயர்வு

    கொரோனா வைரஸ் இப்போதும் மிகவும் புதிரான வைரஸாக இருக்கிறது. இது எப்படி தோன்றியது, எதில் இருந்து உருவானது என்ற பின்னணி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. உலக சுகாதார ஆராய்ச்சி மையம் தொடங்கி உலகம் முழுக்க பல நாடுகள் இது தொடர்பாக ஆராய்ச்சி செய்து வருகிறது.

    உலகம் முழுக்க 198556 பேர் இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் எண்ணிக்கை இன்று இரண்டு லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுக்க 7987 பேர் இதனால் பலியாகி உள்ளனர்.

    என்ன கணக்கெடுப்பு

    என்ன கணக்கெடுப்பு

    இந்த நிலையில் சீனாவில் கொரோனா தாக்கியவர்களை வைத்து அந்நாட்டின் வுஹனில் இருக்கும் ஷோங்னான் மருத்துவமனை நிர்வாகம் முக்கியமாக ஆராய்ச்சியை செய்துள்ளது. மொத்தமாக கொரோனா தாக்கிய 2500 பேரை இந்த மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். அவர்களின் உணவு பழக்கம், பணிகள், அவர்களின் அன்றாட செயல்கள், ரத்த மாதிரி, முந்தைய நோய் தாக்குதல் என்று பல விஷயங்களை ஆராய்ச்சி செய்துள்ளனர்.

    உண்மை என்ன

    உண்மை என்ன

    இந்த நிலையில் இதில் ஒரு திடுக்கிடும் உண்மை வெளியாகி உள்ளது. அதன்படி கொரோனா பாதித்த 2500 பேரில் 65% பேர் ஏ ரத்த வகையை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது ஏ+, ஏ-, ஏபி +. ஏபி - ஆகிய ரத்த மாதிரிகளை கொண்டவர்கள். இவர்களுக்குத்தான் இந்த வைரஸ் எளிதாக தாக்கி உள்ளது. இன்னொரு பக்கம் ஓ+ ஓபி+, ஓபி - மற்றும் ஓ- வகை ரத்தம் கொண்டவர்களுக்கு குறைவாக தாக்கியுள்ளது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் ஓ வகை ரத்தம் கொண்டவர்களை இந்த வைரஸ் தாக்காது என்றெல்லாம் சொல்லவில்லை. அவர்களுக்கு தாக்குதல் குறைவாக ஏற்படுகிறது. ஆனால் ஏ வகை ரத்தம் கொண்டவர்கள் மிக எளிதாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இவர்கள் கொஞ்சம் ஜக்கிரதையாக, கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த வுஹன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கு முன்பு

    இதற்கு முன்பு

    இதற்கு முன் இதேபோல் சார்ஸ் நோய் வந்தபோதும் நடந்தது. இந்த வைரஸ் அதிகமாக ஏ வகை ரத்தம் கொண்டவர்களைத்தான் தாக்கியது. அதுவும் கொரோனா குடும்பத்தை சேர்ந்த வைரஸ் ஆகும். தற்போது அதேபோல் கொரோனா குடும்பத்தை சேர்ந்த இன்னொரு புதிய வைரஸ்தான் தோன்றி உள்ளது.இதனால் இந்த ரத்த வகை கொண்டவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    English summary
    Coronavirus: A+ and A- are the most vulnerable to the attack than O groups.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X