"அதை" கொஞ்சம் தள்ளி போடுங்க.. இப்போதைக்கு வேணாமே.. விழிபிதுங்கும் அரசு.. இளைஞர்களுக்கு அட்வைஸ்
கர்ப்பம் தரிப்பதை தள்ளி போடுமாறு பிரேசில் அரசு கேட்டுக் கொண்டுள்ளது
பிரேசிலியா: ஆஸ்பத்திரிகள் எல்லாம் நோயாளிகளால் நிரம்பி வழிவதாலும், கர்ப்பிணிகளுக்கும் தொற்று அதிகமாக பரவிவிடுவதாலும், இளம் தலைமுறைக்கு பிரேசில் அரசு ஒரு அட்வைஸ் தந்துள்ளது.. அதன்படி கொஞ்ச காலத்திற்கு கர்ப்பம் தரிக்க வேண்டாம் என்றும் அதை தள்ளிப்போடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
உலக அளவில் உருட்டி மிரட்டி கொண்டிருக்கிறது கொரோனாவின் 2வது அலை பரவல்.. ஒட்டுமொத்த உலக நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்து அதன்கீழ் செயல்பட்டு வருகின்றனர்.
பொதுமக்களும் முடிந்தவரை விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறார்கள்.. எனினும் சில நாடுகள் மோசமாக சிக்கி கொண்டிருக்கின்றன. அதிலும் பிரேசில் படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா
தினந்தோறும் கொத்து கொத்தாக மடியும் உயிரிழப்புகளை தடுக்க போராடி வருகிறது... அதாவது ஒருநாளைக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு அநியாயமாக உயிரிழந்து வருகின்றனர்... இதுவரைக்கும் அதுபோல 3 லட்சத்துக்கும் மேற்பட்டோரை காவு வாங்கி உள்ளது இந்த கொரோனா.

குழந்தைகள்
இதில் அதிக அளவு பாதிக்கப்படுவது, பிறந்த பச்சிளம் குழந்தைகள்தானாம்.. அப்போதுதான் பிறக்கின்றன.. அப்போதே இறந்தும் விடுகின்றன.. பிறந்த குழந்தை கண்ணை சரியாக மூடுவதற்கு முன்பேயே மாண்டு போவது அந்நாட்டு அரசை நிலைகுலைய வைத்து வருகிறது.. அதனால்தான் சுகாதாரத்துறை ஒரு முடிவு எடுத்துள்ளது.. அந்த முடிவை அட்வைஸாக அந்நாட்டு பெண்களுக்கும் வழங்கி உள்ளது.

அட்வைஸ்
அதன்படி, கருவுருவதை கொஞ்ச நாளைக்கு தள்ளிப்போடுமாறு கேட்டு கொண்டுள்ளது... ஏனென்றால், ஆஸ்பத்திரிகளில் ஏற்கனவே கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறார்கள்.. இந்த சூழலில், பிரசவத்துக்காக கர்ப்பிணிகளும் அனுமதிக்கப்படுகிறார்கள்.. அப்படி அனுமதிக்கப்படும்போது, நன்றாக இருக்கும் அவர்களுக்கும் தொற்று எளிதாக பரவிவிடுகிறதாம்.. இது வயிற்றில் உள்ள குழந்தையையும் டைரக்ட்டாக அட்டாக் செய்கிறதாம்..

வேண்டுகோள்
கடந்த வருடம் இந்த மாதிரி நிலைமை இல்லை.. பிரசவத்தின்போது மட்டுமே அந்த பெண்கள் பாதிக்கப்பட்டார்கள்.. இப்போது கர்ப்பம் அடைந்த கொஞ்ச நாளிலேயே குழந்தைக்கும் பாதிப்பு வருவதாக கூறப்படுகிறது.. அதுவும் இந்த 2வது அலை பயங்கரமான ஆபத்தை தருவதால், கர்ப்பிணிகள் அதிகமாகவே பாதிக்கப்படுகிறார்களாம்.. இந்த கொரோனா பரவல் குறையும் வரை, கொஞ்ச காலத்திற்கு கர்ப்பம் தரிப்பதை தள்ளிப்போடுமாறு இளம் தலைமுறைக்கு பிரேசில் அரசு அட்வைஸ் தந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications