For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஹா.. முதல்முறையாக.. சீனாவின் வுகானில் யாருக்கும் கொரானா வைரஸ் பாதிப்பில்லை

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவின் வுகானில் முதல்முறையாக ஒரு நாளில் யாருக்குமே கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதன் மூலம் கொரோனா பாதிப்பை சீனா பெருமளவில் கட்டுப்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கொரானாவால் உயிரிழப்பதும் வெகுவாக குறைந்துள்ளது.

Recommended Video

    அமெரிக்காவில் கொரானாவினால் நிலை என்ன?

    உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று நோய் என்பதுடன் எப்படி, யார் மூலமாக வேண்டுமானாலும் பரவும் என்பதால் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

    coronavirus: Chinas Wuhan reports no new infections

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 8758 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சீனாவில் தான் அதிகம் பேர் உயிரிழந்தனர். இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 200,000 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் சுமார் 3000 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளனர். அங்கு நேற்று ஒரே நாளில் 475 பேர் பலியாகி உள்ளனர்,

    ஆனால் சீனாவில் கொரோனா வைரஸ் வெடிப்பின் மையப்பகுதியான மத்திய சீன நகரமான வுஹானில் முதல் முறையாக புதிததாக யாருக்கும் கொரானா வைரஸ் தொற்று ஏற்படவில்லை. அதேநேரம் நாட்டின் பிறபகுதியில் இருந்து வந்தவர்கள் தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. சீனாவில் ஒட்டுமொத்தமாக 34 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் பெய்ஜிங்கில் மட்டும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ்.. டெல்லியில் மருத்துவமனையின் 7 வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை கொரோனா வைரஸ்.. டெல்லியில் மருத்துவமனையின் 7 வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை

    சீன சுகாதார அமைச்சகம் வெளியிட்ட கணக்குப்படி 80,928, பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை 3245 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிந்துள்ளனர். வுகான் நகரம் அமைந்துள்ள ஹுபே மாகாணத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் நேற்று 8 பேர் புதிதாக இறந்துள்ளனர். அதேபோல் வுகானிலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    English summary
    coronavirus: China's Wuhan reports no new infections for first time . at the same time 4 imported infections in china, Beijing accounted for 21 cases
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X