For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1000ஐ தாண்டியது கொரோனா பலி எண்ணிக்கை.. முடங்கிய சீனா.. விழிபிதுங்கும் சீன அரசு.. பரபரப்பு!

சீனாவில் கொரோனா மூலம் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Is China hiding the real numbers of the Coronavirus ? | சீனா பலி எண்ணிக்கையை மறைக்கிறதா?

    பெய்ஜிங்: சீனாவில் கொரோனா மூலம் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது. அங்கு இதுவரை கொரோனா காரணமாக 1016 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

    கொரோனா காரணமாக சீனாவில் தொடர்ந்து அங்கு பலி எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி வருகிறது. மொத்தம் 22 நாடுகளுக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவிலும் மூன்று பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொடுதல் மூலம் பரவக்கூடியது ஆகும். சீனாவில் வுஹன் நகரத்தில்தான் இந்த வைரஸ் முதல் முறையாக தோன்றியது .

    உணவில் பரவும் வைரஸ்.. ஜப்பான் கப்பலில் நடக்கும் கொடூரம்.. கொரோனா பீதியில் தத்தளிக்கும் 3500 பேர்! உணவில் பரவும் வைரஸ்.. ஜப்பான் கப்பலில் நடக்கும் கொடூரம்.. கொரோனா பீதியில் தத்தளிக்கும் 3500 பேர்!

    உதவி எப்படி

    உதவி எப்படி

    சீனாவில் இந்த வைரஸை கட்டுப்படுத்த தவறியதால் மக்கள் அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இந்த வைரசுக்கு எதிராக சீன அரசு தோல்வி அடைந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். அவர்கள் மற்ற உலக நாடுகளிடம் உதவி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அமெரிக்காவிடமும், இந்தியாவிடமும் ஏற்கனவே சீன அதிபர் ஜி ஜிங்பிங் உதவி கேட்டுவிட்டார்.

    மறைத்தது

    மறைத்தது

    டிசம்பர் இறுதியிலேயே இந்த வைரஸ் தாக்குதல் குறித்து அந்நாட்டு அரசுக்கு தெரிந்தது. ஆனால் அந்த விஷயத்தை வெளியே தெரிவிக்காமல் அரசு மறைத்துவிட்டது. இதனால் அந்நாட்டு அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் இந்த அரசை கவிழ்க்க வேண்டும். உடனடியாக அரசை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்கள். நாளுக்கு நாள் அரசுக்கு எதிராக அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

    பலி எண்ணிக்கை

    பலி எண்ணிக்கை

    சீனாவில் கொரோனா வைரசால் பலி எண்ணிக்கை 1016ஐ தொட்டுள்ளது. 1000 பேருக்கு அதிகமாக இதனால் பலியானது அந்நாட்டை உலுக்கி உள்ளது. நேற்று மட்டும் இதனால் 104 பேர் பலியானார்கள். இதனால் அந்நாட்டு அரசு பெரிய அளவில் அதிர்ச்சி அடைந்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 2146 பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 42638 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    எங்கு அதிகம்

    எங்கு அதிகம்

    முன்பு வுஹன் நகரத்தில்தான் இந்த வைரஸ் அதிகமாக பரவியது. இதனால் வுஹன் நகரம் மொத்தமாக மூடப்பட்டது. ஆனால் தற்போது ஹுபே நகரத்தில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் இந்த வைரஸ் காரணமாக ஹுபே நகரத்தில் 92 பேர் பலியாகி இருக்கிறார்கள். அந்த நகரத்தையே இந்த வைரஸ் மொத்தமாக முடக்கிப் போட்டு இருக்கிறது.

    English summary
    Coronavirus: Death toll crossed 1000 in China, 42638 got affected.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X