திடீர் வேகம் எடுத்த கொரோனா.. பிளேக்கிற்கு இணையாக பரவுகிறது.. 1110 பேர் பலி.. நடுங்கும் சீனா!
Recommended Video
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 1,110 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக மொத்த சீனாவும் நடுநடுங்கி போய் இருக்கிறது. அங்கு மக்கள் நாளுக்கு நாள் இந்த வைரஸ் காரணமாக செத்து மடிந்து வருகிறார்கள்.
இந்த நோய் தாக்குதல் காரணமாக சீனாவில் மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கை பேரழிவு நடக்கும் போது என்ன நடக்குமோ அதேபோல்தான் தற்போதும் சீனாவில் நடந்து வருகிறது.

வைரஸ் எப்படி
சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவ கூடியது. கொரோனா வைரஸ் காரணமாக மொத்தமாக சீனாவில் வுஹன் நகரம் மூடப்பட்டுள்ளது. நோய் பாதிக்கப்பட்ட வுஹன் நகரம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் கூட வெளியே செல்லவில்லை. அங்கு இதனால் பலர் தண்ணீர், உணவு இன்றி கடும் கஷ்டத்தில் இருக்கிறார்கள்.

மாஸ்க் அரசியல்
அங்கு எல்லோரும் முகத்தில் மாஸ்க் அணிந்து சுற்றி வருகிறார்கள். ஆனால் என்னதான் மாஸ்க் அணிந்து இருந்தாலும் கூட நோய் பரவுவதை அங்கு கட்டுப்படுத்த முடியவில்லை. இன்னொரு பக்கம் அங்கு நோய் தாக்கும் மக்கள் சாலையில் நடந்து கொண்டு இருக்கும் போதே சுருண்டு விழுகிறார்கள்.சாலையிலும், மெட்ரோவில் சுருண்டு விழுந்து இவர்கள் உயிரை விட்டுள்ளனர். முக்கியமாக மெட்ரோக்களில் இந்த சம்பவம் அதிகம் நடந்துள்ளது.

பலி எண்ணிக்கை
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 1,110 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா தாக்குதலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 44,200 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுக்க இந்த எண்ணிக்கை 44,815 ஐ தொட்டுள்ளது. நேற்று மட்டும் இதனால் 102 பேர் பலியானார்கள். இதனால் அந்நாட்டு அரசு பெரிய அளவில் அதிர்ச்சி அடைந்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 1500 பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

வேகம்
இந்த வைரஸ் தற்போது நினைத்ததை விட அதிக வேகம் எடுத்துள்ளது. நிறைய சிகிச்சை முறைகள் இருந்தும் இதை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் கண்டிப்பாக இந்த வைரஸ் பிளேக் நோயை விட மிக மோசமான ஒரு நோயாக மாறும் என்று கூறுகிறார்கள். பிளேக் நோய் காரணமாக 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .












Click it and Unblock the Notifications