விளைவுகளை சந்திப்பீர்கள்.. "அந்த" கொரோனா ரிப்போர்டால் சீனா ஐரோப்பா இடையே சண்டை.. என்ன நடந்தது?
கொரோனா பாதிப்பு குறித்து சீனா மற்றும் ஐரோப்பா இடையே பெரிய அளவில் சண்டை வெடித்து இருக்கிறது.
பெய்ஜிங்: கொரோனா பாதிப்பு குறித்து வெளியான ரிப்போர்ட் சீனா மற்றும் ஐரோப்பா இடையே பெரிய அளவில் சண்டை வெடித்து இருக்கிறது. ஐரோப்பாவின் ரிப்போர்ட் ஒன்று சீனாவை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
Recommended Video
உலகம் முழுக்க கொரோனா பரவ சீனாதான் காரணம் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது. இது தொடர்பாக சீனாவிற்கு எதிராக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கடுமையான புகார்களை அடுக்கி வருகிறது.
தற்போது சீனாவிற்கு எதிராக ஐரோப்பிய நாடுகளும் கடுமையாக புகார்களை வைக்க தொடங்கி உள்ளது. கொரோனா குறித்த பரவலை முதலில் சீனா மறைத்துவிட்டது. இதனால் சீனாவை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஐரோப்பா யூனியன் கோரிக்கை வைத்துள்ளது.

எப்போது வெளியாக வேண்டிய ரிப்போர்ட்
கொரோனா பரவல் குறித்து ஐரோப்பா யூனியன் வெளியிட்ட இந்த ரிப்போர்ட்டில் உலக நாடுகள் இந்த வைரஸ் தாக்குதலுக்கு எதிராக எப்படி செயல்பட்டது என்று தெரிவித்துள்ளது. சீனா இந்த வைரஸின் தோற்றம் குறித்து முக்கியமான விஷயங்களை சொல்லவில்லை. தொடக்க காலத்தில் கொரோனா எப்படி பரவியது என்பதை சீனா வெளிப்படையாக சொல்லவில்லை. சீனா இதில் நிறைய விஷயங்களை மறைத்துவிட்டது என்று ஐரோப்பா குற்றஞ்சாட்டி உள்ளது.

கசிந்தது
முதலில் இந்த ரிப்போர்ட் கடந்த 21ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னே ஆங்கில சர்வதேச இதழ் ஒன்றில் இந்த ரிப்போர்ட் கசிந்தது. இதில் சீனாவிற்கு எதிராக கடுமையான வார்த்தைகளை ஐரோப்பா பயன்படுத்தி இருந்தது. சீனாவை நேரடியாக மிக கடுமையாக குற்றஞ்சாட்டி இருந்தது. இந்த ரிப்போர்ட் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

சீனா கடும் கோபம்
இந்த நிலையில் இந்த ரிப்போர்ட்டை பார்த்து சீனா கடுமையாக ஐரோப்பா மீது கோபம் கொண்டதாக கூறப்படுகிறது. சீனாவின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஐரோப்பாவை சேர்ந்த பல்வேறு அதிகாரிகளிடம் இது தொடர்பாக நேரடியாக முறையிட்டு இருக்கிறார்கள். நீங்கள் எங்களை புண்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை தயார் செய்துள்ளீர்கள். உங்களது ரிப்போர்ட் எங்களுக்கு கோபத்தை அளிக்கிறது.

யாருக்காக?
பெய்ஜிங் ஐரோப்பா மீது கோபத்தில் உள்ளது. நீங்கள் யாருக்காக இப்படி செய்கிறீர்கள் என்று தெரியும். யாரை சமாதானப்படுத்த இப்படி செய்கிறீர்கள் என்று தெரியும். இந்த ரிப்போர்ட் வெளியே வந்தால், நீங்கள் கடுமையான விளைவுகளை சந்திப்பீர்கள். ஐரோப்பா சீனா உறவில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று சீனா குறிப்பிட்டுள்ளது. இந்த சண்டை இரண்டு நாட்கள் நடந்துள்ளது.

முக்கியமான விஷயங்களை மாற்றியது
அதன்பின் இந்த கட்டுரையில் நிறைய திருத்தங்களை செய்து ஐரோப்பா இரண்டு நாட்கள் கழித்து வெளியிட்டு இருக்கிறது என்று கூறப்படுகிறது. சீனாவிற்கு எதிரான முக்கியமான வாசங்கங்களை நீக்கிவிட்டு, இந்த கட்டுரையை ஐரோப்பா வெளியிட்டுள்ளது என்று கூறப்படுகிறது. கடைசி 6 பக்கங்கள் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்க, சீனா, ஐரோப்பா இரண்டு நாட்டை சேர்ந்த அதிகாரிகளும் மறுத்துவிட்டனர். எதிர்காலத்தில் இந்த பிரச்சனை பூதாகரமாகும் என்று கூறுகிறார்கள்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications