என்னால் வர முடியாது.. எனக்கு இருமல், தும்மல்.. ரோமில் மக்கள் முன் பேசிய போப் பிரான்சிஸ்.. பரபரப்பு!

தனக்கு ஏற்பட்ட கடுமையான இருமல் மற்றும் தும்மல் காரணமாக கிறிஸ்துவ மத விழா ஒன்றில் இருந்து போப் பிரான்சிஸ் கடைசி நேரத்தில் விலகியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

ரோம்: தனக்கு ஏற்பட்ட கடுமையான இருமல் மற்றும் தும்மல் காரணமாக கிறிஸ்துவ மத விழா ஒன்றில் இருந்து போப் பிரான்சிஸ் கடைசி நேரத்தில் விலகியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலகில் மொத்தம் 60 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது. கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 3000 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுக்க உள்ள பலி எண்ணிக்கை ஆகும் இது. சீனாவில் மட்டும் 2900 பேருக்கும் மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு பலியாகி இருக்கிறார்கள். அதேபோல் உலகம் முழுக்க மொத்தம் 88000 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இப்போது என்ன

இப்போது என்ன

இத்தாலியில் 1100 பேருக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது. இதுவரை அங்கு 30 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் இத்தாலி தலைநகர் ரோமில் வசித்து வரும் போப் பிரான்சிஸ் கடுமையான இருமல் மற்றும் தும்மல் மூலம் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மூச்சு விடுவதில் பெரிய அளவில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் முக்கியமான விழாக்களை தவிர்த்துள்ளார்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

அதன்படி போப் பிரான்சிஸ் லெண்டேன் விழா ஒன்றில் கலந்து கொள்வதாக இருந்தது. இதற்காக வாட்டிகனின் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று திடீர் என்று இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாது என்று போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார். நேற்று மதியம் ரோமில் மக்கள் முன்னிலையில் தோன்றி போப் பிரான்சிஸ் பேசினார். அதில் எனக்கு உடல் நிலை சரியில்லை.

உடல்நிலை சரியில்லை

உடல்நிலை சரியில்லை

எனக்கு தொடர் இருமல் வருகிறது. அதனால் என்னால் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாது. நான் இதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன். நான் விழாவிற்கு வரவில்லை என்றாலும் உங்களுடன் எப்போதும் இருப்பேன். மத ரீதியாக, ஆன்மா ரீதியாக எப்போதும் உங்களுடன் இருப்பேன். நான் என்னுடைய வீட்டில் இருந்து வழிபாடுகளை தொடர்வேன். தொடர்ந்து வழிபாடுகளை நடத்துவேன், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

போப் பிரான்சிஸ் எப்படி

போப் பிரான்சிஸ் எப்படி

போப் பிரான்சிஸ் இந்த அறிவிப்பை வெளியிடும் போதே அவர் மீண்டும் மீண்டும் இருமினார். பலமுறை இவர் அடுத்தடுத்து இருமியது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. இவருக்கு 20 வயது இருக்கும் போதே ஒரு நோய் குறைபாடு காரணமாக நுரையீரலில் இருந்தது சிறிய பகுதி வெட்டி எடுக்கப்பட்டது. இதனால் அவ்வப்போது மூச்சு விடுவதில் போப் பிரான்சிஸுக்கு சிரமம் ஏற்படும். ஆனால் இவருக்கு ஏதாவது நோய் தாக்குதல் உள்ளதா என்பதை இவரின் உதவியாளர்கள் விளக்கவில்லை .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+