இன்னும் 2 வாரம்.. கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்?.. ரஷ்யா திட்டம்!
மாஸ்கோ: கொரோனாவிற்கு எதிராக தாங்கள் உருவாக்கி இருக்கும் தடுப்பு மருந்து அடுத்த மாதம் மக்களை பயன்பாட்டிற்கு வரும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனையை மனிதர்கள் மீது ரஷ்யா முழுமையாக செய்து முடித்து உள்ளது. உலகிலேயே முதல்முறையாக இந்த தடுப்பு மருந்து சோதனையை மனிதர்கள் மீது ரஷ்யாவை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று முழுமையாக செய்து முடித்துள்ளது .
ரஷ்யாவை சேர்ந்த செச்செநோவ் பகுதியில் இருக்கும் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி இந்த சாதனையை செய்துள்ளது. மனிதர்கள் மீது இந்த சோதனையை செய்து முடித்து இருக்கிறோம். இதுவரை வெளியான முடிவுகள் சிறப்பாக இருக்கிறது என்று ரஷ்யா கூறியுள்ளது.

என்ன முடிவு
இந்த சோதனையில் ஈடுப்பட்ட நபர்கள் கடந்த புதன் கிழமையும் அதன்பின் ஜூலை 20ம் தேதியும் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள். ஜூன் 18ம் தேதி 18 பேர் மீதும், ஜூன் 23ம் தேதி 20 பேர் மீதும் இந்த தடுப்பு மருந்தை சோதனை செய்து இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் தற்போது கண்காணிப்பில் இருக்கிறார்கள். இவர்களுக்கு உடலில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றுவிட்டது என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

எப்போது
இந்த நிலையில் பெயர் வைக்கப்படாத இந்த தடுப்பூசியை அடுத்த மாதம் அமலுக்கு கொண்டு வர ரஷ்யா முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யாவின் சுகாதாரத்துறை அமைச்சர் முரஷ்கோ தெரிவித்துள்ள கருத்தில், ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் அமலுக்கு வரும். இதை மக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் 2 அல்லது மூன்று வாரங்களில் கொண்டு வருவோம்.

சோதனை மிச்சம்
இந்த மருந்து மீதான கடைசி கட்ட சோதனையை இன்னும் மிச்சம் இருக்கிறது. ஆனாலும் இதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம். ரஷ்ய அரசின் விதியின்படி இரண்டு கட்ட சோதனைகளை ஒரு மருந்து தாண்டிவிட்டால் போதும். மூன்றாம் கட்ட சோதனை நடக்கும் போதே அதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும்.

மக்கள் முடிவுக்கு
அதனால் இதை மக்களுக்கு கொடுக்க முடிவு செயது இருக்கிறோம். இன்னொரு பக்கம் எப்போதும் போல ஆராய்ச்சி நடந்து கொண்டு இருக்கும், என்று குறிப்பிட்டு இருக்கிறார். ரஷ்யாவில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த தடுப்பு மருந்து தற்போது மூன்றாம் கட்ட சோதனைக்கு தயார் ஆகியுள்ளது. இந்த கடைசி கட்ட சோதனை ஆகஸ்ட் 3ம் தேதி நடக்க உள்ளது.

எங்கு எல்லாம்
ரஷ்யாவில் மட்டுமின்றி சவுதி அரேபியா, அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலும் இந்த மருந்தின் மூன்றாம் கட்ட சோதனை செய்யப்பட உள்ளது. மொத்தம் ஆயிரம் பேரிடம் இந்த மருந்தை சோதனை செய்ய இருக்கிறார்கள். இந்த மருந்தை இந்த வருடம் இறுதிக்குள் 30 மில்லியன் பேருக்கு கொடுக்கும் அளவிற்கு தயாரிக்க உள்ளனர் . அதேபோல் 170 மில்லியனை வெளிநாடுகளில் தயாரிக்க வைக்கும் திட்டத்திலும் உள்ளனர்.
Recommended Video

ஐந்து நாடுகள்
இந்த மருந்தை உற்பத்தி செய்ய இந்தியா உட்பட ஐந்து நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளது என்கிறார்கள். இந்த மருந்துக்கு நாங்கள் காப்புரிமை வாங்கி இருக்கிறோம். ஆனால் பிற நாடுகள் எங்களிடம் பணம் கொடுத்து இதை உற்பத்தி செய்யலாம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இதை நாங்கள் சுயமாக உருவாக்கி இருக்கிறோம். மற்ற நாடுகளில் உள்ள தொழில்நுட்பத்திற்கும், நாங்கள் தடுப்பு மருந்து தொழில்நுட்பத்திற்கு நிறைய வேறுபாடு உள்ளது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications