76 நாட்கள்.. முடிவிற்கு வந்தது நீண்ட லாக் டவுன்.. சுதந்திர காற்றை சுவாசிக்கும் வுஹன்.. சீனா அதிரடி!
சீனாவில் வுஹன் நகரத்தின் லாக் டவுன் முடிவிற்கு வந்துள்ளது.
பெய்ஜிங்: சீனாவில் வுஹன் நகரத்தின் லாக் டவுன் முடிவிற்கு வந்துள்ளது. 76 நாட்களுக்கு பிறகு சீனாவில் வுஹன் நகரத்தின் லாக் டவுன் முடிவிற்கு வந்துள்ளது.
Recommended Video
உலகமே கொரோனா வைரஸால் நிலை குலைந்து போய் உள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, இந்தியா , இத்தாலி, ஸ்பெயின் என்று உலக நாடுகள் எல்லாம் கொரோனாவை சமாளிக்க முடியாமல் நிலை குலைந்து போய் உள்ளது. இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் உலகின் வல்லரசு நாடுகள் எல்லாம் குழம்பி வருகிறது.
ஆனால் இந்த கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்டு, தனது அனைத்து முயற்சிகளிலும் வெற்றிபெற்று தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது சீனா. முத்தாய்ப்பாக சீனாவில் கொரோனா தோன்றிய வுஹன் நகரத்தில் லாக் டவுன் முடிவிற்கு கொண்டு வரப்பட்டு இயல்புநிலை திரும்பி உள்ளது.

எங்கே தோன்றியது
சீனாவின் வுஹன் நகரத்தில்தான் முதல் நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 2019 டிசம்பர் 1ம் தேதி முதல் நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த வைரஸ் முதலில் சீனா முழுக்க பரவியது. அதன்பின் ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் வைரஸ் பரவியது. அதன்பின் உலகம் முழுக்க தீவிரமாக இந்த கொரோனா வைரஸ் பரவி உள்ளது. அங்கு இருக்கும் வுஹன் மீன் மார்க்கெட் ஒன்றில் வைரஸ் தோன்றி இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

நிறைய சர்ச்சைகள்
அதே சமயம் வுஹன் வைராலஜி ஆராய்ச்சி மையத்தில் இருந்து வைரஸ் கசிந்து வெளியாகி இருக்கலாம் என்கிறார்கள். அதே சமயம் இந்த வைரஸ் வெளவால் அல்லது எறும்புத்திண்ணியில் இருந்து கூட உருவாகி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் எப்படி இருந்தாலும் முதலில் சீனாவில் வுஹனில் இருந்த நபருக்குத்தான் கொரோனா பரவியது. சீனாவில் 52% கேஸ்கள் இந்த வுஹனில்தான் பதிவாகி உள்ளது. ஏறத்தாழ 44 பேர் அங்கு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர்.

கொஞ்சம் இயல்புநிலை
ஆனால் சீனாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அங்கு கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. சீனாவில் நேற்று 20 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அதில் 18 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அதே சமயம் கடந்த 11 நாட்களாக சீனாவின் வுஹனில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. ஆம் அங்கு மொத்தமாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

மரணம் இல்லை
அதேபோல் சீனாவில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா காரணமாக யாரும் பலியாகவில்லை. சீனாவில் வேகமாக இயல்பு நிலை திரும்பி உள்ளது. சீனாவில் 77,167 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அங்கு 1242 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சீனாவில் 81,740 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3331 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பலன் அளித்துள்ளது.

முடிகிறது
கொரோனா வுஹன் நகரத்தில் வேகமாக பரவிய போது அந்த மொத்த நகரத்தையும் சீனா மூடியது. இது பலருக்கும் பெரிய அதிர்ச்சி அளித்தது. உலக நாடுகள் சில இதை மிக மோசமான மூவ் என்று கூட கூறியது . ஆனால் தற்போது சீனாவின் கட்டுப்பாடுகள் அங்கு பலன் அளித்துள்ளது. அங்கு ஒரு வழியாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து சீனாவில் வுஹன் நகரம் திறக்கப்பட்டு உள்ளது.

வேறு எங்கு லாக் டவுன்
சீனாவில் வுஹன் நகரத்தின் லாக் டவுன் முடிவிற்கு வந்துள்ளது. 76 நாட்களுக்கு பிறகு சீனாவில் வுஹன் நகரத்தின் லாக் டவுன் முடிவிற்கு வந்துள்ளது. அதேபோல் இதனால் சீனாவில் ஹூபேய் உள்ளிட்ட 12 மாநிலங்களில் தடைகளை தளர்த்தி உள்ளனர். அங்கு ஹோட்டல்கள், கடைகள் திறக்கப்பட்டது. முக்கியமாக சில இடங்களில் மால்கள், தியேட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளது.

வெளியே செல்லலாம்
அங்கு வுஹன் நகரத்தை விட்டு வெளியேற விரும்பும் மக்கள் வெளியேறலாம். அங்கு மக்களின் ஆரோக்கியத்தை பொறுத்து அவர்களுக்கு மஞ்சள், சிவப்பு, பச்சை என்று மூன்று வண்ணங்களில் க்யூஆர் கோட் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் பச்சை நிறம் உள்ளவர்கள் வேறு மாகாணங்களில் சென்று குடியேறலாம். இன்றில் இருந்து வுஹனில் ரயில் போக்குவரத்து தொடங்க உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications