நிரூபிக்க முடியாது.. இந்த வைரஸ் வுஹனில் தோன்றவில்லை.. மறுக்கும் சீன மருத்துவர்கள்.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் சீனாவில் இருக்கும் வுஹன் நகரத்தில் தோன்றி இருக்க வாய்ப்பு இல்லை என்று சீன மருத்துவர்கள் குழு தெரிவிக்கிறது.

கொரோனா வைரஸ் யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வேகத்தில் பரவி வருகிறது. சீனாவில் மட்டும் இந்த வைரஸ் 80,928 பேர் வரை பாதித்து இருக்கிறது. அங்கு இதுவரை 3,245 பேர் வரை பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் இந்த வைரஸ் 35,713 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு இதுவரை 2978 பேர் இந்த வைரஸால் பலியாகி உள்ளனர். இந்த கொடூரமான கொரோனா வைரஸ் இந்தியாவில் மொத்தம் 177 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் சீனாவில் தோன்றியது ஆகும்.

என்ன உண்மை

என்ன உண்மை

கொரோனா சீனாவில் உள்ள வுஹன் நகரத்தில் தோன்றி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அங்கு இருக்கும் மீன் மார்க்கெட் ஒன்றில் வைரஸ் தோன்றி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இல்லையென்றால் வுஹன் வைராலஜி ஆராய்ச்சி மையத்தில் இருந்து வைரஸ் கசிந்து வெளியாகி இருக்கலாம் என்கிறார்கள். அதே சமயம் இந்த வைரஸ் வெளவ்வாலில் இருந்து கூட உருவாகி இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் புதிய திருப்பமாக கொரோனா வைரஸ் சீனாவில் இருக்கும் வுஹன் நகரத்தில் தோன்றி இருக்க வாய்ப்பு இல்லை என்று சீன மருத்துவர்கள் குழு தெரிவிக்கிறது. சீனாவில் இதய மருத்துவம் தொடர்பாக ஆராய்ச்சி செய்து வரும் அரசின் தலைமை ஆராய்ச்சியாளர் சோங் நான்ஸான் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், இந்த வைரஸ் சீனாவில் அதிலும் வுஹனில் தோன்றியது என்று கூற முடியாது. முதலில் எச்1என்1 வைரஸ் சீனாவில் உருவானதாக கூறப்பட்டது.

உண்மை இதுதான்

உண்மை இதுதான்

ஆனால் எச்1என்1 வைரஸ் உண்மையில் மெக்சிகோவில் உருவானது கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் தாமதமாகத்தான் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டது. அதேபோல் மெர்ஸ் வைரஸ் சவுதி அரேபியாவில் உருவானது. அப்போதும் கூட சீனாவை பலர் குற்றஞ்சாட்டினார். எச்1என்1 வைரஸை யாரும் மெக்சிகோ வைரஸ் என்று கூறவில்லை. மெர்ஸ் வைரஸை யாரும் அரேபியா வைரஸ் என்று கூறவில்லை.

சீனா பாவம்

சீனா பாவம்

ஆனால் இந்த கொரோனா வைரஸை மட்டும் ஏன் இப்படி வுஹன் வைரஸ் என்று அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த வைரஸ் சீனாவில் உருவானது என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. யாரும் ஒரு சின்ன ஆதாரம் கூட இதற்கு கொடுக்கவில்லை. எப்படி வேண்டுமானாலும் இந்த வைரஸ் சீனாவிற்கு வந்து இருக்கலாம். இது அறிவியல். இதை ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு, இன வெறியுடன் சீனா மீது பலர் புகார் வைக்கிறார்கள் என்று, இவர் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+