அமெரிக்காவில் டிசம்பரிலேயே கொரோனா வந்துவிட்டது.. அதிர்ச்சி தந்த பிரேத பரிசோதனை.. புது மர்மம்!
அமெரிக்காவில் கொரோனா தாக்குதல் பிப்ரவரியில் இல்லை மாறாக டிசம்பர் மாதத்திலேயே வந்துவிட்டது என்று மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கலிபோர்னியா: அமெரிக்காவில் கொரோனா தாக்குதல் பிப்ரவரியில் இல்லை மாறாக டிசம்பர் மாதத்திலேயே வந்துவிட்டது என்று மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
அமெரிக்காவில் கொரோனா காரணமாக மொத்தமாக 988,928 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாளை இந்த எண்ணிக்கை 10 லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் கொரோனா காரணமாக மொத்தம் 55,459 பேர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவில் பிப்ரவரி தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அந்த மாத இறுதியில் கொரோனா காரணமாக முதல் நபர் பலியானார்.

டிசம்பர் மாதம்
இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா பிப்ரவரி மாதம் கொரோனா வரவில்லை மாறாக டிசம்பர் மாதமே கொரோனா வந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி கலிபோர்னியாவில் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள சாண்டா கிளாரா கவுண்டியின் தலைமை செயலாளர் ஜெப் ஸ்மித் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கலிபோர்னியாவில் உள்ள சில மருத்துவர்களும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதற்கு முன்பே வந்துள்ளது
அதன்படி இந்த வைரஸ் அமெரிக்காவில் நினைத்ததற்கு முன்பே கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் கொரோனா காரணமாக முதல் நபர் பிப்ரவரி 29ம் தேதியில்தான் பலியானார். வாஷிங்க்டனில் இந்த மரணம் ஏற்பட்டது. ஆனால் தற்போது எடுக்கப்பட்ட சில சோதனைகள் மூலம் கலிபோர்னியாவில் அதற்கு முன்பே கொரோனா ஏற்பட்டு இருவர் பலியானது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கலிபோர்னியாவில் பிப்ரவரி 6ம் தேதி ஒருவர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளார்.

அதிர்ச்சி அடைந்துள்ளனர்
அதேபோல் பிப்ரவரி 19ம் தேதி இன்னொரு நபர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளார். இவர்கள் இருவருக்கும் டிசம்பர் இரண்டாம் வாரத்திலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடல்கூறு சோதனையின் மூலம் இந்த கண்டுபிடிப்பு செய்யப்பட்டுள்ளது. உடல்கூறு சோதனையில் இந்த கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது அமெரிக்காவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

வெளிநாடு செல்லவில்லை
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இவர்கள் இருவரும் வெளிநாடு செல்லவில்லை. வெளிநாட்டு நபர்கள் யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை. இதனால் வேறு அமெரிக்கர்கள் யாராவது மூலம் இவர்களுக்கு கொரோனா வந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதனால் அமெரிக்காவில் டிசம்பரிலேயே சமூக பரவல் இருந்திருக்க வாய்ப்புள்ளது. அதனால்தான் அங்கு இவ்வளவு கொரோனா கேஸ்கள் வந்துள்ளது என்று கூறுகிறார்கள்.

கேள்வி எழுந்தது
இவர்கள் இருவருக்கும் சீனா செல்லாமலே கொரோனா வந்துள்ளது. இதனால் இவர்களுக்கு எப்படி கொரோனா வந்தது என்று கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் அமெரிக்காவிற்குள் எப்படி கொரோனா முதலில் நுழைந்தது என்றும் கேள்வி எழுந்துள்ளது. சீனா மூலம்தான் கொரோனா வந்தது என்று அமெரிக்கா கூறி வந்தது. ஆனால் தற்போது டிசம்பரிலேயே அமெரிக்காவில் கொரோனா வந்தது கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சி அளித்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications