மாயமான மலேசிய விமான பயணிகளின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.21 லட்சம் திருடிய பெண் வங்கி அதிகாரி
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த நான்கு பேரின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ. 21 லட்சம் திருடிய பெண் வங்கி அதிகாரி மற்றும் அவரது கணவர் மலேசிய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்ததாகக் கூறப்படும் விமானத்தை மாதக் கணக்கில் தேடி வருகிறார்கள்.

இந்நிலையில் மாயமான விமானத்தில் பயணம் செய்த இரண்டு சீனர்கள் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 4 பேரின் ஹெச்.எஸ்.பி.சி. வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.21 லட்சத்தை எடுத்த மலேசியாவைச் சேர்ந்த பெண் வங்கி அதிகாரியும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த திருட்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் மலேசியாவில் தான் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பயணிகள் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டது குறித்து வங்கி தான் போலீசாருக்கு தெரிவித்துள்ளது.
பணத்தை திருடியதற்காக கைது செய்யப்பட்ட பெண் கடந்த 10 ஆண்டுகளாக வங்கியில் பணிபுரிந்துள்ளார். ஆனால் அவர் எந்த வங்கி ஊழியர் என்பதை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications