Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ஈகிள் பேஸ்'.. ரகசிய இடங்களை முன்கூட்டியே இடித்து தரைமட்டமாக்கியதா அமெரிக்க படைகள்.. பகீர் தகவல்

ஆப்கனில் இருந்து வீரர்களை வெளியேற்ற பலவித யுக்திகளை கடைப்பிடித்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

காபூல்: நாட்டை விட்டு வெளியேறும் முன்பேயே, அமெரிக்க படைகள் தாங்கள் பயன்படுத்திய ரகசிய இடங்கள், கட்டிடங்கள் மற்றும் வெடிமருந்து கிடங்குகளை இடித்து தரைமட்டமாக்கியதாக தகவல்கள் கூறுகின்றன.

Recommended Video

    Secret Base-களை முன்கூட்டியே இடித்து தரைமட்டமாக்கியதா US Army? | Eagle Base | Oneindia Tamil

    தொடர்ந்து தீவிரவாத நடவடிக்கைகள் நீண்டு கொண்டே சென்றதால் ஆப்கனை விட்டு வெளியேற அமெரிக்க அரசு முடிவெடுத்தது...

    அற்கேற்றபடி, கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி காபுல் நகரை தாலிபான்கள் கையகப்படுத்திய நிலையில் அமெரிக்க படையினர் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வெளியேறுவதற்கு கெடு விதிக்கப்பட்டிருந்தது.

     ஹெலிகாப்டர்கள்

    ஹெலிகாப்டர்கள்

    ஆனாலும், கெடு முடிவதற்கு ஒரு நாள் முன்னாடியே, அதாவது ஆகஸ்ட் 30-ம் தேதி நள்ளிரவே,அமெரிக்க படைகள் ஆப்கனை விட்டு முழுமையாக வெளியேறினர்... அப்படிவெளியேறும் முன்னர் தங்களின் தளவாடங்களை முழுமையாக அமெரிக்க படையினர் எடுத்து செல்ல போதுமான நேரமும் கிடைக்கவில்லை.. எனினும், தங்கள் நாட்டு ராணுவ தளவாடங்கள் தாலிபான்கள் கைக்கு செல்வதை தவிர்க்க சினூக் ஹெலிகாப்டர்கள், ஹம்வீக்கள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு போன்றவற்றை நிரந்தரமாக செயலிழக்கச் செய்துவிட்டு தான் அமெரிக்க படையினர் வெளியேறியிருக்கின்றனர்.

     கிடங்குகள்

    கிடங்குகள்

    முன்னதாக, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்ட் 31-க்குள் திரும்ப பெறப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்து இருந்தார்... அப்போது இருந்தே அமெரிக்க படைகள் தாங்கள் பயன்படுத்திய ரகசிய இடங்கள், கட்டிடங்கள் மற்றும் வெடிமருந்து கிடங்குகளை இடித்து தரைமட்டமாக்கியதாக தற்போது பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன..

    பயிற்சி

    பயிற்சி

    பயங்கரவாத எதிர்ப்பு படைகளுக்கு பயிற்சியளிக்க ஈகிள் பேஸ் எனப்படும் ஒரு ரகசிய இடத்தை அமெரிக்க படைகள் பயன்படுத்தி வந்தனர். அதனையும் "சால்ட் பிட்" என்று அழைக்கப்படும் முதல் தடுப்பு மையத்தையும், ரகசிய பாதுகாப்பு கிடங்குகளையும் தாலிபான்கள் கைப்பற்றி விடக்கூடாது என்பதற்காக அமெரிக்க படைகள் முன்கூட்டியே திட்டமிட்டு அழித்துவிட்டனர் என்றும் வட்டாரங்கள் கூறுகின்றன.

    கட்டிடங்கள்

    கட்டிடங்கள்

    ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மூன்று மைல்கள் தொலைவில் ஈகிள் பேஸ் இருந்ததாக கூறப்படுகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அமெரிக்க படைகள் உப்பு குழியில் உள்ள கட்டிடங்களை அழிக்கத் தொடங்கியது. இந்த கட்டிடங்கள் 2002 மற்றும் 2004-க்கு இடையில் கட்டப்பட்டதாகும். ஈகிள் பேஸ் அழிக்கப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

     வெளியேற்றம்

    வெளியேற்றம்

    ஆக மொத்தம் 20 வருஷமாய் ஆப்கானிஸ்தானில் நடந்து வந்த போர் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.. அமெரிக்காவின் வெளியேற்ற நடவடிக்கையும் இறுதி முடிவுக்கு வந்தது... ஆனால், இதற்கு பிறகு ஆப்கானிஸ்தானிய மக்களின் நிலைமை படுமோசமாகி விட்டது.. சொந்த நாட்டில் அகதிகளாய் மாறிவிட்ட நிலைமை நேர்ந்துள்ளது... கையில் மூட்டை, முடிச்சுகளோடும், பிள்ளை குட்டிகளோடும் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்..

     புள்ளிவிவரம்

    புள்ளிவிவரம்

    எங்கே போவது, எப்படி போவது என்று விழிபிதுங்கி கொண்டிருக்கிறார்கள்.. அமெரிக்கா ஏற்கனவே 1 லட்சத்து 23 ஆயிரம் மக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றியதாக சொன்னது.. ஆனால், அவர்களில் எத்தனை பேர் ஆப்கானிஸ்தானியர்கள் என்பதை மட்டும் புள்ளிவிவரமாக தெரிவிக்கப்படவில்லை... இப்போது 35 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலைமைக்கு ஆளாகி இருப்பதாக சொல்கிறார்கள்...

     மாகாணங்கள்

    மாகாணங்கள்

    ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேர் எல்லை வழியாக பாகிஸ்தானில் தஞ்சம் புகுகிறார்களாம்... இதை செயற்கைகோள் மூலம் ஆதாரமாக எடுத்து காட்டுகிறார்கள்.. மற்றொரு பக்கம் ஈரானும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு புகலிடம் தந்து வருகிறது... 3 மாகாணங்களில் அது அகதிகளுக்காக அவசர கால கூடாரங்களையும் அமைத்து தந்திருக்கிறது..

    சோகம்

    சோகம்

    அதேபோல, தஜிகிஸ்தானிலும் பல்லாயிரக்கணக்கான அகதிகள் ஏற்கனவே அடைக்கலம் அடைந்துவிட்டனர்... உஸ்பெகிஸ்தானிலும் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.. இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி போன்ற நாடுகளிலும் ஆப்கானிஸ்தானியர்கள் தஞ்சம் புகுந்து வருகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+