இரும்பு கோட்டையை தகர்த்த கொரோனா?.. படபடத்த "கிம் ஜோங்".. டாப் அதிகாரிகள் டிஸ்மிஸ்.. அதிரும் வடகொரியா
பியாங்யாங்: ஒரு கொரோனா வைரஸ் கேஸ் கூட இல்லை என்று வடகொரியா அரசு மார் தட்டிக்கொண்டு இருந்த நிலையில், வடகொரியாவில் தற்போது டாப் அதிகாரிகள் சிலர் கொரோனா தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
உலகம் முழுக்க வளர்ந்த நாடுகள் தொடங்கி ஏழ்மையான நாடுகள் அவரை அனைத்திலும் கொரோனா வைரஸ் பரவிவிட்டது. பல வளர்ந்த நாடுகள் கூட கொரோனாவை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் நடுங்கி போய் இருக்கிறது.
உலக நாடுகளை இப்படி கொரோனா ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் நிலையில் சீனாவின் "நியூக்" நண்பன் வடகொரியாவில் கொரோனாவே இல்லை என்று அந்த நாட்டு அரசு தெரிவித்து வருகிறது.

கொரோனா
எங்களிடம் கொரோனா கேஸ்கள் எதுவும் இல்லை என்று வடகொரியா கூறி வருகிறது. உலக சுகாதார மையத்திற்கே இங்கு வடகொரியாவில் கொரோனா இருக்கிறதா இல்லையா என்ற குழப்பம் நிலவி வருகிறது. உலக சுகாதார மையத்திடம் இது தொடர்பான டேட்டாக்கள் எதுவும் இல்லை. வடகொரியாவின் ஏலியன் வந்து தங்கினால் கூட யாருக்கும் தெரியாது.

பாதுகாப்பு
அந்த அளவிற்கு வடகொரியா "இண்ட்ரோவட்" நாடு. எதையும் அந்த நாடு வெளிப்படையாக அறிவித்தது கிடையாது (அணு ஆயுத சோதனையை தவிர). அப்படிப்பட்ட வடகொரியாவில் தற்போது டாப் அதிகாரிகள் சிலர் கொரோனா தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். முக்கியமான தவறு ஒன்றை செய்து, முக்கியமான விஷயம் ஒன்றுக்கு வழி ஏற்படுத்திவிட்டதாக கூறி இவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

கோபம்
இது தொடர்பாக வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் மிகவும் கோபமாக அமைச்சரவையில் பேசி உள்ளார். அந்த அதிகாரிகள் தங்கள் கடமையை செய்யவில்லை. இதனால் தற்போது நாட்டின் பாதுகாப்பும், மக்களின் ஆரோக்கியமும்., கேள்விக்குறியாகி உள்ளது. இவர்கள் கடுமையான தண்டனைக்கு தகுதியானவர்கள். "முக்கியமான விஷயம்" ஒன்றுக்கு இவர்களின் அலட்சியம் வழி ஏற்படுத்தி கொடுத்துவிட்டது, என்று கோபமாக குறிப்பிட்டுள்ளார்.

வெளிப்படையாக கொரோனா
அதோடு அதிகாரிகள் பொறுப்புணர்வு இன்றி செயல்பட்டதால் அரசின் இத்தனை கால பாதுகாப்பு நடவடிக்கைகள் கேள்விக்குறியாவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். வெளிப்படையாக கொரோனா பாதிப்பு என்று கிம் ஜோங் தெரிவிக்கவில்லை என்றாலும், கொரோனாவை பற்றித்தான் அவர் பேசுகிறார் என்று உலக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கண்டிப்பாக அங்கு கொரோனா பரவி விட்டது என்று கூறியுள்ளனர்.

கொரோனா பரவல்
வடகொரியாவில் கடந்த ஒன்றரை வருடமாக பார்டர் லாக் செய்யப்பட்டுள்ளது. மக்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் அங்கு அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இது வடகொரியா கொரோனா பரவலை ஒப்புக்கொள்ளும் விதமாக எடுத்த நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது. வடகொரியாவின் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லை. மருத்துவ வசதிகள் இல்லை.

தடை
இதனால் உலக நாடுகளிடம் உதவி கேட்கும் விதமாக வடகொரியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. விரைவில் கொரோனா பரவல் குறித்து அந்த நாடும் வெளிப்படையாக அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கொரோனா பரவல் அங்கு தொடங்கிவிட்டது, இல்லையென்றால் அந்நாட்டு அரசு இப்படி டாப் அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யாது என்று கூறப்படுகிறது.

அதிரும்
ஏற்கனவே கிம் ஜோங் உன் உடல் எடை குறைந்ததால் வடகொரிய மக்கள் கலக்கத்தில் இருந்தனர். அவருக்கு கொரோனாவோ என்று சந்தேகித்தனர். அதோடு அந்நாட்டின் விலைவாசி புதிய உச்சத்தை தொட்டதும் குறிப்பிடத்தக்கது. பல்வேறு விஷயங்களால் கலங்கி போய் இருக்கும் வடகொரியா தற்போது கொரோனாவும் ஏற்பட்டால் மொத்தமாக முடங்கும் வாய்ப்புகள் உள்ளன.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications