அதிருகிறது ஐரோப்பா.. உலக அளவில் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள்!
ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள் உருவாகி உள்ளதாக ஹூ தெரிவித்துள்ளது
ஜெனீவா: உலக அளவில் கடந்த ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகியிருப்பது அதிர்ச்சி தருவதாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மிகக் குறுகிய காலத்தில் இத்தனை அதிகம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது, அது வேகமாக மீண்டும் பரவி வருவதையே காட்டுவதாகவும் ஹூ தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று நிலவரம் குறித்த வாராந்திர ஆய்வு விவரத்தை வெளியிட்டுள்ளது ஹூ. அதன்படி 2வது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் இங்குதான் தற்போது அதிகமாக கொரோனா பரவி வருகிறது.
ஐரோப்பாவில் கடந்த ஒரு வாரத்தில் 10.3 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது உலக அளவில் இது 46 சதவீதமாகும். ஐரோப்பாவில் பலி எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. முந்தைய வாரத்தை விட கடந்த வாரத்தில் இது 35 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேசமயம், கடந்த குளிர்காலத்தில் ஏற்பட்ட பலியை விட இப்போது குறைவாகவே உள்ளது. ஐரோப்பாவின் 21 நாடுகளில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கையும், ஐசியூ தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாம்.
அதுமட்டுமல்ல, கடந்த 3 வாரமாக அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா, பிரேசில், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாரத்திற்கு 1 லட்சம் பேருக்கே என்ற அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்தியாவில் கடந்த 2 வாரமாக பாதிப்பு குறைந்து வருகிறது. பலியானோர் எண்ணிக்கையும் குறைந்து வரகிறது. தினசரி பாதிப்பு தற்போது 40 முதல் 50,000 என்ற அளவில் குறைந்திருக்கிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,893 புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications