இரண்டாக பிரியும் ஆப்ரிக்க கண்டம்.. லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பகீர் தகவல்
ஆப்ரிக்க கண்டம் இரண்டாக பிரிவதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
நைரோபி: ஆப்ரிக்க கண்டம் இரண்டாக பிரிவதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் ஏதாவது ஒரு நாடு நாள்தோறும் நிலநடுக்கத்தை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக பொருட்சேதம் உயிர்ச்சேதம் ஏற்படுவதும் வாடிக்கைதான்.
இந்நிலையில் நிலநடுக்கம் காரணமாக பூமியின் மேற்பரப்பு மற்றும் அடித்தட்டுகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.

மிகப்பெரிய நிலப்பிளவு
இதனிடையே கென்யாவில் நிலநடுக்கம், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. இந்த இயற்கை பேரழிவுகளால் ஆப்பிரிக்க கண்டத்தில் மிகப்பெரிய நிலப்பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பலத்த சேதம்
இது குறித்து லண்டன் பல்கலைக்கழகத்தின் ராயல் ஹாலோவேயின் ஆராய்ச்சியாளர் ஒருவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் சமீபத்தில் ஆப்பிரிக்க கண்டத்தில் நில அதிர்வு ஏற்பட்ட போது கென்யாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள நைரோபி - நரோக் நெடுஞ்சாலை முழுவதும் பலத்த சேதமடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதட்டுகளாக பிரித்து
இந்த நில அதிர்வை தொடர்ந்து வடக்கே ஏடன் வளைகூடா தொடங்கி தெற்கே ஜிம்பாப்வே வரை சுமார் 3000 கி.மீ. தூரத்திற்கு நிலப்பகுதியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த பிளவு ஆப்பிரிக்க கண்டத்தை இரு தட்டுகளாக பிரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

பிளவுப்பட வாய்ப்பு
மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவு உள்ளிட்ட காரணங்களால் இந்த பிளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும், இது தொடரும் நிலையில் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு உள்ளது என்றும் அந்த ஆராய்ச்சியாளர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications