தாய்லாந்து: ரயிலில் சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்! கிரேன் விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு!

Subscribe to Oneindia Tamil

பாங்காக்: தாய்லாந்தில் ஓடும் ஒயில் மீது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தற்போது வரை 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் வடகிழக்கே 230 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நக்கோன் ராட்சசிமா மாகாணத்தின் சிகியோ மாவட்டத்தில் நேற்று காலை இந்த விபத்து நேரிட்டுள்ளது. உபோன் ராட்சதானி மாகாணத்துக்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது, ரயில் மீது கிரேன் விழுந்துள்ளது.

Thailand accident train

விபத்து நடந்த இடத்தில், அதிவேக ரயில் திட்டப் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இதற்காக பயன்படுத்தப்பட்ட கிரேன் சரிந்து ஓடிக்கொண்டிருந்த ரயில் மீது விழுந்தது. இதனால், ரயில் தடம் புரண்டு தீப்பற்றியது. தற்போது தீ அணைக்கப்பட்டு விட்டன. இந்த விபத்தில் 22 பேர் பலியான நிலையில் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. ஏராளமானோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், தாய்லாந்து ரயில் மீது கிரேன் விழுந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. பலர் உடல் நசுங்கி படுகாயம் அடைந்துள்ள நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அச்சம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தாய்லாந்தின் பாங்காக்கை லாவோஸ் வழியாக சீனாவின் குன்மிங் பகுதியுடன் இணைக்கும் அதிவேக ரயில் சேவைக்கான கட்டுமானப் பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. சுமார் 540 கோடி டாலர்கள் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட கிரேன் தான் ரயில் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+