Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அலறவிட்ட "அந்தரங்கம்".. இன்னொரு பரிதாப பெண்.. வெட்டி கூறுபோட்டு சாக்கடையில்.. பகீர் வாக்குமூலம்..!

இந்து பெண்ணை கொன்று துண்டு துண்டாக வெட்டிய இளைஞர் கைதானார்

Subscribe to Oneindia Tamil

டாக்கா: டிட்டோ டெல்லியில் நடந்தது போலவே, இன்னொரு கொடுமை நடந்துள்ளது.. தன் காதலியை அதே போல வெட்டி கூறுபோட்டுள்ளார் இளைஞர் ஒருவர்.

டெல்லி ஷ்ரத்தா கொலையின் அதிர்ச்சியே இன்னும் அடங்கவில்லை.. ஒரு இளைஞனால் இந்த அளவுக்கு குரூரமாகவும், வன்மமாகவும், கொடூரமாகவும் இருக்க முடியுமா என்ற அதிர்ச்சியை, அப்தாப் ஏற்படுத்தி வருகிறார்.

இந்த கொலை குறித்து, கொஞ்சம் உண்மை தெரிந்ததற்கே, நாட்டு மக்கள் உறைந்து போயுள்ளனர்.. இன்னும் முழு உண்மை வெளிவரவில்லை.. இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, அதற்குள் பங்களாதேஷில் 4 நாட்களுக்கு முன்பு ஒரு கொலை நடந்தது.

ஹவுஸ் ஓனர்

ஹவுஸ் ஓனர்

வங்கதேசத்தை சேர்ந்தவர் அபுபக்கர்.. கவிதா ராணியை என்பவரை இவர் காதலித்து வந்துள்ளார்... இந்நிலையில், கடந்த நவம்பர் 6ம் தேதி முதல் அபு பக்கரை காணவில்லை. இது அவரது நண்பர்கள் முதல், வேலை பார்க்கும் இடங்கள் வரை அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தது.. முதலில் அவர் செல்போனுக்கு போன் செய்தனர்.. ஆனால், தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆபீசுக்கு அபுபக்கர் வராததால், அவர் குடியிருக்கும் வாடகை வீட்டுக்கு ஆள் அனுப்பி உள்ளார்... ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது.. ஹவுஸ் ஓனருக்கும் இது சந்தேகத்தை கிளப்பியது.. அதனால், போலீசில் புகார் தந்தார்..

அபுபக்கர்

அபுபக்கர்

போலீசாரும் விரைந்து வந்து, அபுபக்கர் வீட்டில் ஏதாவது ஆதாரம் கிடைக்கலாம் என்று, வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.. ஆனால், உள்ளே நுழைந்ததுமே போலீசார் அதிர்ந்து நின்றுவிட்டனர்.. தலையில்லாமல் ஒரு பெண்ணின் உடல் கிடந்தது.. அந்த உடல், ஒரு பெட்டியில் போடப்பட்டிருந்தது.. பக்கத்திலேயே ஒரு பிளாஸ்டிக் கவர் இருந்தது.. அந்த கவருக்குள் அந்த பெண்ணின் தலை கிடந்தது.. ஆனால், கைகளை காணவில்லை.. இதையடுத்து, உடனடியாக விசாரணையில் குதித்தனர்.. படுகொலை செய்யப்பட்டவர் பெயர் கவிதா ராணி என்ற இந்து பெண் என்பது தெரிய வந்தது..

 லிவிங் டூ கெதர்

லிவிங் டூ கெதர்

அபுபக்கருக்கு ஏற்கனவே சப்னா என்ற ஒரு காதலி இருக்கிறார்.. இவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே, லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.. கவிதா ராணியை கொலை செய்வதற்கு 5 நாள் முன்புதான், அபுபக்கருக்கு அவரிடம் பழக்கம் ஏற்பட்டதாம்.. கடந்த நவம்பர் 5ம் தேதி, சப்னா வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார்.. வீட்டில் வேறு யாரும் இல்லாததால், கவிதாவை அபு பக்கர் அழைத்து வந்திருக்கிறார்..

 தூண்டில் மீன்

தூண்டில் மீன்

இருவருக்கும் அப்போது இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.. அந்த சண்டையில்தான், ஆத்திரமடைந்த அபு பக்கர் கவிதாவின் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார்... பிறகு, அங்கேயே உட்கார்ந்து கவிதாவின் தலையை தனியாகவும், உடம்பை தனியாகவும், கைகளை தனியாகவும் வெட்டியுள்ளார்... தலையை ஒரு பாலிதீன் கவரில் வைத்து விட்டு, உடலை ஒரு பெட்டியில் திணித்து வைத்துவிட்டு, கைகளை மட்டும் துண்டித்து எடுத்து வந்து, அருகில் இருந்த ஒரு கால்வாயில் வீசி எறிந்துள்ளார்.. கொலை செய்த அன்றைய தினம் இரவே, சப்னாவை அழைத்துக் கொண்டு, ருப்சா ஆற்றை கடந்து டாக்காவுக்கு அபு பக்கர் தப்பி சென்றுவிட்டார்..

 மிஸ்ஸிங் ஜோடி

மிஸ்ஸிங் ஜோடி

இந்த விவரங்கள் அனைத்தும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நவம்பர் 6ம் தேதி இரவு, அபு பக்கரின் இருப்பிடத்தை போலீசாரும், உளவுத்துறையும் கண்டுபிடித்து, காஜிபூர் மாவட்டத்தின் பாசன் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சௌரஸ்தா பகுதியில் அவர்களை கைது செய்தனர்.. பின்னர் சோனாடங்கா போலீசிலும் அந்த ஜோடியை ஒப்படைத்தனர்.. போலீசார் நடத்திய விசாரணையில், அபுபக்கர் குற்றத்தை உடனே ஒப்புக்கொண்டார்..

 வாக்குமூலம்

வாக்குமூலம்

மனைவி வேலைக்கு செல்லும் நேரத்தில் கவிதாவும் - அபூபக்கரும் சந்தித்து வந்துள்ளனர்... சம்பவத்தன்று கவிதா அபுபக்கர் வீட்டுக்குள் நுழைந்தபோதுதான், சப்னாவுடன் அபுபக்கர் ஏற்கனவே குடும்பம் நடத்தி வரும் விவகாரமே தெரியவந்ததாம். எனவே, அதை பற்றி கேட்கவும்தான், இவர்களுக்குள் தகராறு வெடித்து, கழுத்தை நெரித்து கவிதாவை கொன்றதாக அபுபக்கர் போலீசில் கூறியுள்ளார்.. மேலும், அபூபக்கரின் வாக்குமூலத்தின்படி பாலித்தீன் கவரில் சுற்றப்பட்ட கவிதாவின் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களும் தற்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளன..

 எக்கச்சக்க கொச்சை

எக்கச்சக்க கொச்சை

இந்தச் சம்பவ குறித்து, வங்காளதேச இந்துக்களுக்கான குரல் என்ற அமைப்பு கடுமையான குரல் எழுப்பி உள்ளது.. தன்னுடைய ட்வீட்டர் பதிவில், வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து உள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.. அதேபோல் நாவ்காவன் மாவட்ட நீதிபதி ஹசன் மஹ்முதுல் இஸ்லாம், தொடர்ந்து இந்துக்களை கொச்சைப்படுத்தி வருவதாகவும், ரங்பூரில் காளி கோயிலில் காளி சிலையை கிளர்ச்சியாளர்கள் சிலர் சேதப்படுத்தி உள்ளனர் என்றும் அந்த அமைப்பு மேலும் குற்றம் சாட்டியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+