For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"தண்ணியைக் குடி".. கோலா பாட்டிலைத் தூக்கி போட்ட ரொனால்டோ.. "பிராவோ"!

Google Oneindia Tamil News

லிஸ்பன்: "சூப்பர் ஸ்டார்"னா இப்படித்தான் இருக்கணும்... சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருக்கக் கூடாது.. அதை அதிரடியாக நிரூபித்துள்ளார் கால்பந்து சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ.

தன் முன்பு வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டில்களைப் பார்த்த அவர் அதை தூக்கி அப்படியே ஓரம் கட்டினார். அருகில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலைத் தூக்கி பிரதானமாக வைத்தார்.. அத்தோடு நிற்கவில்லை அவர்.. தண்ணீர் குடிங்க என்றும் பாட்டிலை தூக்கிக் காட்டி நிருபர்களை தெறிக்க விட்டார்.

 இந்த மனுஷனைப் போய் தோற்கடிச்சுட்டோமே.. தீரா வருத்தத்தில் கோவில்பட்டி! இந்த மனுஷனைப் போய் தோற்கடிச்சுட்டோமே.. தீரா வருத்தத்தில் கோவில்பட்டி!

ரொனால்டோ டயட்டில் ரொம்ப ஸ்டிரிக்ட்.. உடல் நலத்தில் ரொம்ப அக்கறை காட்டும் நபர். தேவையில்லாத குப்பைகளை உடலுக்குள் சேர்ப்பதை அவர் ஒரு போதும் அனுமதிப்பதில்லை. தான் மட்டும் அப்படி இருக்காமல் அனைவருக்கும் இதே அறிவுரையை சொல்லவும் தவறுவதில்லை.

நேர் எதிரான வீரர்

நேர் எதிரான வீரர்

மாரடோனாவும் ஒரு சூப்பர் ஸ்டார்தான். ஆனால் உணவுக் கட்டுப்பாடு இல்லாதவர். இஷ்டத்திற்கு சாப்பிடுவார்.. இஷ்டப்பட்டதை செய்வார். இந்த விஷயத்தில் ரொனால்டோ அப்படியே நேர் எதிரானவர். இதுதான் சாப்பிட வேண்டும். இப்படித்தான் செய்ய வேண்டும் என்பதை அழகாக பின்பற்றக் கூடியவர். அதுதான் அவரது உடல் ஆரோக்கியத்தின் முக்கியமான ரகசியமும் கூட.

நான் ரொம்ப ஓபன்

நான் ரொம்ப ஓபன்


லிஸ்பன் பிரஸ்மீட்டிலும் இதைத்தான் வெளிக்காட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் ரொனால்டோ. ஈரோ 2020 கால்பந்துப் போட்டித் தொடர் தொடர்பான ஒரு பிரஸ்மீட் லிஸ்பன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜூவன்டஸ் அணி சார்பில் ஆடும் ரொனால்டோ பிரஸ்மீட்டுக்கு வந்திருந்தார். நிருபர்களை சந்திப்பதற்காக பிரஸ் மீட் டேபிளுக்கு வந்தவர் தன் முன்பு இரண்டு கோகோ கோலா பாட்டில்களை வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தார்.

ஓரம் கட்டப்பட்ட கோலா

ஓரம் கட்டப்பட்ட கோலா

அதை தூக்கி அப்படியே தனது இடது கை பக்க மூலையில் தள்ளி வைத்து விட்டார். கோலாவுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து பிரதானமாக வைத்தார். அத்தோடு அதை மேலே தூக்கிக் காட்டி " தண்ணீர் குடிங்க" என்றும் செய்தியாளர்களிடம் கூறி விட்டு பாட்டிலை மேலே வைத்து விட்டு பிரஸ் மீட்டை ஆரம்பித்தார்.

தண்ணீர் பிடிக்கும்

தண்ணீர் பிடிக்கும்

ஈரோ 2020 போட்டித் தொடரின் ஸ்பான்சரே கோலாதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ரொனால்டோ அதைப் பற்றிக் கவலைப்படவே இல்லை. ரொனால்டோவுக்கு கோலா மட்டுமல்ல பெப்சியும் கூட பிடிக்காது. எந்த வகையான குளிர்பானங்களையும் அவர் விரும்புவதில்லை, குடிப்பதும் இல்லை. மாறாக அவர் ஒரு தண்ணீர்ப் பிரியர். நிறைய தண்ணீர் குடிப்பார். அதுதான் அவருக்கு பிடித்த பானமும் கூட.

சொல் பேச்சு கேட்காத மகன்

சொல் பேச்சு கேட்காத மகன்

ரொனால்டோவுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். பிள்ளைகளின் உடல் நலம் குறித்து அதிக அக்கறை கொண்டவர் ரொனால்டோ. ஆனால் அவரது பிள்ளைகள் சில நேரம் சொல் பேச்சு கேட்பதில்லை. கோகோ கோலா குடிப்பதில் அவரது மகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியர் ஆர்வம் அதிகம் உடையவர். அதேபோல நொறுக்குத் தீனி தின்பதிலும் அதிக ஆர்வம். இது ரொனால்டோவுக்குப் பிடிப்பதில்லை

தண்ணீர் குடிங்க

தண்ணீர் குடிங்க

அதுகுறித்து ஒரு முறை கூறுகையில் எனது மகன் கால்பந்தில் பெரிய வீரனாக உருவெடுத்தால் மகிழ்வேன். ஆனால் அவன் கோலா குடிப்பதிலும், நொறுக்குத் தீனி தின்பதிலும் ஆர்வம் காட்டுகிறான். அது கவலையைத் தருகிறது. எரிச்சல் வருகிறது. அவனிடம் நான், நிறைய தண்ணீர் குடி.. தப்பே இல்லை. இதெல்லாம் வேண்டாம் என்று கூட கூறிப் பார்த்து விட்டேன்.. எங்கே கேட்கிறான் என்று அலுத்துக் கொண்டார் ரொனால்டோ.

அதிர்ச்சியில் கோலா

அதிர்ச்சியில் கோலா

கோகோ கோலோ பாட்டிலை தூக்கி ரொனால்டோ ஓரம் கட்டிய வீடியோ தற்போது கால்பந்து உலகில் சிறிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகவும் அது பரவி வருகிறது. உலகம் முழுக்க பிரபலமான ஒரு கால்பந்து சூப்பர் ஸ்டார் ஜஸ்ட் லைக் தட் கோகோ கோலா பாட்டிலைத் தூக்கி ஓரம் கட்டிய செயலால் கோலா நிறுவனமும் கூட சற்றே அதிர்ந்துதான் போயுள்ளதாம்.

English summary
Portugal football superstar Cristiano Ronaldo Removed Coco Cola bottles from the table during a press meet in Lisbon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X