வங்கதேசத்தில் காளி கோவிலுக்கு மோடி அளித்த கிரீடம் திருட்டு.. இந்தியா கொடுத்த ரியாக்ஷன்
டாக்கா: வங்கதேசத்தின் சதகிரா நகரில் உள்ள ஜசோரேஸ்வரி கோவிலுக்கு பிரதமர் மோடி தானமாக அளித்த தங்க முலாம் பூசப்பட்ட கிரீடம் திருடு போயுள்ளது. இது குறித்து இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளதோடு திருடப்பட்ட கிரீடத்தை விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கதேசத்தை வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தின் ஐஸ்வரிபுர் பகுதியில் காளி கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் அமைந்து இருக்கும் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக இந்த ஜெசோரேஷ்வரி கோவிலும் கருதப்படுகிறது.

12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படும் இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இது பின்னர் 13ஆம் நூற்றாண்டில் லக்ஷ்மன் சென் என்பவரால் புதுப்பிக்கப்பட்டதாகவும், அதன்பின் ராஜா பிரதாபதித்யா என்பவர் 16ஆம் நூற்றாண்டில் இந்த கோயிலை மீண்டும் கட்டியதாகவும் கூறப்படுகிறது. வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் இந்தக் கோவிலுக்கு அதிக அளவில் செல்கிறார்கள்.
பிரதமர் மோடி கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி வங்கதேசம் சென்று இருந்தார். அப்போது, இந்தக் கோவிலுக்கு சென்ற மோடி, முழுவதும் வெள்ளியால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட இந்த கிரீடத்தை உபயமாக கொடுத்தார். அப்போது முதல் இந்த கிரீடம் சாமி சிலையில் அணிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தான், நேற்று மதியம் கிரீடத்தை மர்ம நபர் ஒன்று திருடிச்சென்று இருக்கும் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
கோவிலில் பூஜைகள் முடிந்த பிறகு சுத்தம் செய்யும் ஊழியர் வந்து பார்த்த போது கிரீடம் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து புகாரளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கோவிலுக்குள் நுழைந்து சாமி சிலையில் இருக்கும் கிரீடத்தை ஒருவர் தூக்கி செல்லும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மெற்கோண்டு வருகிறார்கள்.
இதனிடையே, காளி கோவிலுக்கு பிரதமர் மோடி பரிசாக அளித்த கிரீடம் திருடு போயுள்ள சம்பவம் குறித்து இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காளி கோவிலுக்கு பிரதமர் மோடி பரிசாக அளித்த கிரீடம் திருடு போனது குறித்து வங்கதேச அரசிடம் எங்கள் கவலைகளை வெளிப்படுத்தி இருக்கிறோம். இது தொடர்பாக வங்கதேச அரசு விசாரணை நடத்தவும், கிரீடத்தை மீட்டு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்" என்று கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தக் கோவிலுக்கு சென்ற போது, கோவிலில் கம்யூனிட்டி ஹால் ஒன்றையும் இந்தியா கட்டி கொடுக்கும் என்று உறுதி அளித்து இருந்தார். இந்த கம்யூனிட்டி ஹால் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் அதாவது, சமூக,மதம் மற்றும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது நிவாரண முகாம்களாகவும் பயன்படுத்திக்கொள்ளவும் முடியும் என்று மோடி கூறியிருந்தார். வங்கதேசத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்துக் கோவிலில் உள்ள கிரீடம் திருடு போயிருப்பது அங்குள்ள இந்துக்களுக்கு கவலையையும் அதிர்ச்சியையும் கொடுத்து இருக்கிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications