இந்திய பெருங்கடலில் திடீர் புயல்: மாயமான விமானத்தை தேடும் பணி பாதிப்பு
பெர்த்: இந்திய பெருங்கடல் பகுதியில் புயல் வீசுவதால் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி இன்று ஒரு நாளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மாயமான மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு தெரிவித்தது. இதையடுத்து இந்திய பெருங்கடல் பகுதியில் விமானத்தை தேடும் பணி ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வருகிறது.
தேடல் பணி தீவிரமாக நடந்து வருகிறபோதிலும் விமானம் குறித்து எந்தவித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

புயல்
இந்திய பெருங்கடலில் புயல் வீசுவதால் மாயமான விமானத்தை தேடும் பணி இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது மாயமான விமானத்தை தேட விமானங்கள் இன்று பயன்படுத்த மாட்டாது.

கப்பல்கள்
விமானங்கள் மூலம் தேடும் பணி நிறுத்தப்பட்டபோதிலும் இன்று 10 கப்பல்கள் மலேசிய விமானத்தை தேடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளில்லா நீர்மூழ்கி
ஆளில்லா நீர்மூழ்கி கப்பலான ப்ளூஃபின் 21 9 முறை கடலின் தரை பரப்புக்கு சென்று விமானத்தை தேடியுள்ளளது. ஆனால் இதுவரை விமானம் பற்றி முக்கிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

சிக்னல்கள்
கருப்புப் பெட்டியின் சிக்னல்கள் வந்த இடத்தில் தான் ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் விமானத்தை தேடி வருகிறது. அது இதுவரை மூன்றில் இரண்டு பங்கு இடத்தில் விமானத்தை தேடியுள்ளது.

வானிலை
வானிலை நன்றாக இருந்தால் ஒரு வாரத்திற்குள் நீருக்கு அடியில் விமானத்தை தேடும் பணி முடிவடைந்துவிடும் என்று தேடல் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications