செத்துப் போன பன்றியின் வாயில்.. ஓ மை காட்... அப்படியா செய்தார் டேவிட் காமரூன்?
லண்டன்: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, செத்துப் போன பன்றியின் வாயில் தனது ஆணுறுப்பை வைத்தார் டேவிட் காமரூன் என்று ஒரு சர்ச்சையான தகவல் இங்கிலாந்தை உலுக்கி வருகிறது.
இங்கிலாந்து பிரதமர் மீதான இந்த பரபரப்புத் தகவல் ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கால் மி டேவ் என்ற பெயரிலான அந்த புத்தகம் ஒரு சுயசரிதையாகும். இந்த நூலை எழுதியிருப்பவர் முன்னாள் கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கியத் தலைவரான லார்ட் அச்கிராப்ட் ஆவார். அவருடன் இணைந்து முன்னாள் சண்டே டைம்ஸ் ஆசிரியர் இசபெல் ஓக்கிஷாட்டும் எழுதியுள்ளார்.

காமரூன் பல்கலைக்கழகத்தில் நடந்தபோது நடந்தவை குறித்த விவரங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. காமரூன் 1985 முதல் 88 வரை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பிரசெனோஸ் கல்லூரியில் தத்துவம், அரசியல், பொருளாதார பட்டப் படிப்பை படித்தார். அப்போது அங்கிருந்த பியர்ஸ் கேவ்ஸ்டன் சொசைட்டி என்ற டைனிங் கிளப்பில் அவரும் இடம் பெற்றிருந்தார்.
அந்த கிளப் உறுப்பினர்களிடையே நடந்த ஜாலியான போட்டியின்போது காமரூன் செத்துப் போன பன்றியின் வாயைத் திறந்து அதில் தனது ஆணுறுப்பை வைத்து கலகலப்பை ஏற்படுத்தினாராம்.
அதை அந்த கிளப்பில் உறுப்பினராக இருந்த இன்னொரு மாணவர் புகைப்படமும் எடுத்துள்ளார். ஆனால் அந்தப் புகைப்படம் வெளியிடப்படவில்லை.
இ்த கிளப்பானது ஒரு ரகசிய கிளப்பாக செயல்பட்டு வந்தது. நடிகர் ஹியூஜ் கிரான்ட், லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன் ஆகியோரும் அதில் உறுப்பினர்களாம். இந்த கிளப்பின் செயல்பாடுகள் முற்றிலும் வினோதமாகவே இருக்கும். அதாவது வினோதமான செயல்களில் ஈடுபடுவது, செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடுவது உள்ளிட்டவை இதன் முக்கிய அம்சங்களாகும்.
மேலும் பல்கலைக்கழகத்தில் உள்ள கஞ்சா அடிப்போர் குரூப்பிலும் காமரூன் இருந்ததாகவும் அந்த நூல் கூறுகிறது. காமரூனின் நண்பரான ஜேம்ஸ் டெலிங்போல், நாங்கள் சூப்பர்டிரம்ப் ராக் குழுவின் கச்சேரியை கஞ்சா அடித்தபடி கேட்டு ரசித்ததாக கூறியுள்ளார்.
இந்த சர்ச்சை குறித்து இதுவரை கேமரூனோ அல்லது பிரதமர் அலுவலகமோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications