இந்தியா தேடும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை இதுதான்!
மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு மாரடைப்பு ஏற்பட்டவுடன் கராச்சியில் உள்ள ஆகா கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கராச்சி: மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு மாரடைப்பு ஏற்பட்டவுடன் கராச்சியில் உள்ள ஆகா கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தாவூத் இப்ராஹிமுக்கு வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்ட போதிலும் அரை மணி நேரத்திற்குள் அவரது நிலைமை மிகவும் மோசமடைந்தது.

இதைத் தொடரந்து கராச்சியில் உள்ள ஆகா கான் மருத்துவமனையில் இரவு 7 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறப்பு நிபுணர்கள் கொண்ட மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தது. எனினும் அவரது நிலை மிகவும் மோசமடைந்ததால் மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சையை அவரது உடல் நிலை ஏற்கவில்லை.
தாவூத் அனுமதிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு உயர் அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த மருத்துவமனையில் தாவூத் பல்வேறு பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற்றதாகவும் தெரிகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சிகிச்சை பெற்ற தாவூத் மிகவும் பலவீனமாக நிலையில் காணப்பட்டார். இதனால் தாவூத் இப்ராஹிம் பிழைக்க வாய்ப்பில்லை. அவர் மரணமடைந்திருக்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications