Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூளையை தின்னும் அமீபா.. தொற்று கண்டறியப்பட்ட 5 நாட்களில் மரணம்! எச்சரிக்கும் மருத்துவர்கள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: டெக்சாஸில் 71 வயது மூதாட்டி ஒருவர் மூளையை தின்னும் அமீபாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழாய் தண்ணீரை பயன்படுத்தி மூக்கில் உள்ள அழுக்கை வெளியேற்ற முயன்றபோது, அமீபா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "71 வயது மூதாட்டி கடுமையான காய்ச்சல் மற்றும் தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளால் மருத்துவமனைக்கு வந்தார். நாங்கள் முடிந்தவரை அவருக்கு சிகிச்சை அளித்தோம். ஆனால் காப்பாற்ற முடியவில்லை.

Brain US Woman

அவர் மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படும் 'நேக்ளீரியா ஃபவுலரிவால்' பாதிக்கப்பட்டிருந்தார். இது அரிய மற்றும் கொடுமையான ஒரு செல் உயிரியாகும். இந்த அமீபா 'அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்' என்கிற மூளை தொற்றை ஏற்படுத்துகிறது. இது மூளை மற்றும் மூளையைச் சுற்றியுள்ள 'மெனிங்கஸ்' எனப்படும் பாதுகாப்பு உறையில் அழற்சியை ஏற்படுத்துகிறது. உடலை அதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கும் அமைப்புதான் இந்த 'மெனிங்கஸ்'.

இது பாதிக்கப்பட்டால் வலிப்பு, மன பிரம்மை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். அடுத்த 5-10 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்துவிடுவார்கள். மூதாட்டி விஷயத்திலும் இதுதான் நடந்தது. சிகிச்சையை தொடங்கியவுடன் அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இருப்பினும் நாங்கள் சிகிச்சையை விடவில்லை. 8 நாட்களுக்கு பிறகு அவர் உயிரிழந்துவிட்டார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

இது ஒரு குழப்பமான கேஸ். மூளையை உண்ணும் அமீபா நன்னீரில் இருக்கும். ஏரிகள், ஆறுகள், வெப்ப நீரூற்றுகள், முறையாக பராமரிக்கப்படாத நீச்சல் குளங்களில் இது இருக்கும். இது மூக்கு வழியாக உடலில் நுழைந்து, மூளைக்குச் சென்று திசுக்களை அழிக்கிறது. இதனால் கடுமையான மூளை வீக்கம் ஏற்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, கழுத்து வீக்கம், ஒளியைத் தாங்க முடியாமை, குழப்பம், வலிப்பு மற்றும் மயக்கம் ஏற்படும். இந்த அறிகுறிகள் தெரிந்த 10 நாட்களுக்குள் அவர்கள் உயிரிழந்துவிடுவார்கள். இது ஏன் குழப்பமான நோய் என்றால், எல்லோரும் இந்த நோயால் பாதிக்கப்படுவதில்லை. தினமும் கோடிக்கணக்கான மக்கள் நீர் நிலைகளில் குளிக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் பாதிக்கப்படுவதில்லை.

அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் ஆண்டுக்கு ஏறத்தாழ வெறும் 10 பேர்தான் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் 97% பேர் உயிரிழக்கிறார்கள். இவர்களை காப்பாற்றுவது சிரமாக இருக்கிறது. எனவேதான் இதை குழப்பமான நோய் என்று சொல்கிறோம். விரைவில் இதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உயிரிழப்புகள் தடுக்கப்படும்.

ஆனால் அதற்கு முன்னர் மக்கள் நன்கு காய்ச்சி, ஆற வைத்த நீரை மட்டுமே குடிக்கவும், முகம், மூக்கை சுத்தப்படுத்தவும் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் தொற்று பாதிப்பை தடுக்கலாம்" என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+