பிரேசிலில் பயங்கர நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 46-ஆக உயர்வு.. நூற்றுக்கணக்கானோர் மாயம்
பிரேசிலின் சா பெளலோ மாகாணத்தில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகளும், கட்டிடங்களும் பூமியில் புதைந்தன.
பிரேசிலியா: பிரேசில் நாட்டில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 46- ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பிரேசிலில் பல்வேறு மாகாணங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வந்த நிலையில், சா பெளலா மாகாணத்தில் இந்த திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், பிரேசில் ராணுவத்தினர் ஆகியோர் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்தடுத்து பயங்கரம்
நடப்பாண்டின் தொடக்கமே பேரிடருடன்தான் ஆரம்பித்திருக்கிறது. துருக்கி, சிரியா நாடுகள் இம்மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களால் உருக்குலைந்து போயுள்ளன. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், நேற்று துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஒருபுறம் இருக்க, பிரேசிலில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

கொட்டி தீர்க்கும் கனமழை
பிரேசிலின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கடலோர மாகாணங்களில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கிப் போயுள்ளன. மழை நீர் வெள்ளம் ஒருபுறம் இருக்க, கடல் சீற்றமும் ஏற்பட்டதால் பல கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

பயங்கர நிலச்சரிவு
இந்நிலையில்தான், பிரேசிலின் சா பெளலோ மாகாணத்தில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகளும், கட்டிடங்களும் பூமியில் புதைந்தன. தகவலறிந்து வந்த மீட்புப் படையினர், துரிதமாக செயல்பட்டு பலரை மீட்டு வருகின்றனர். இதுவரை 46 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். எனினும், நூற்றுக்கணக்கானோர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப் பணிகள் பாதிப்பு
இந்த சூழலில், சா பெளாலோ மாகாணத்தில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பிரேசில் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே, அடுத்த 15 நாட்களுக்கு மேலும் பலத்த மழையும், சூறைக்காற்றும் வீசும் என பிரேசில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் சா பெளலோ மாகாணத்தில் உள்ள 6 நகரங்களில் அந்நாட்டு அரசு பேரிடர் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications