For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குலுங்கிய தென் கொரியா.. ஹாலோவீன் கூட்ட நெரிசலில் சிக்கி.. உடல் நசுங்கி 149 பேர் பலி.. கொடூரம்!

Google Oneindia Tamil News

சியோல்: தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள இட்டவோன் நகரில் ஹாலோவீன் விழாவில் கூட்ட நெரிசலில் 149 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அச்சம் ஏற்பட்டு உள்ளது. நேற்று இரவு வரை 120 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 149 ஆக உயர்ந்து உள்ளது.

இந்த சம்பவத்தில் 150க்கும் மேற்பட்டோர் கடுமையாக காயம் அடைந்து உள்ளனர். 1 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த விழாவில் கலந்து கொண்ட நிலையில் கூட்ட நெரிசலில் 149 பேர் பலியாகி உள்ளனர்.

’ஜோய்லன் ஷோவான்’ புரியலையா? அதாங்க திருமண வாழ்த்து! வாணியம்பாடி வந்த தென் கொரியா மணமகள்! ’ஜோய்லன் ஷோவான்’ புரியலையா? அதாங்க திருமண வாழ்த்து! வாணியம்பாடி வந்த தென் கொரியா மணமகள்!

கூட்ட நெரிசல்

கூட்ட நெரிசல்

நேற்று அங்கு ஹாலோவீன் காரணமாக பிரம்மாண்டமாக விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பொதுவாக இந்த விழாவில் 50 -60 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள். கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக இந்த விழா வெளியில் நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் இதை முன்னிட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 60 ஆயிரம் பேர் வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று 1 லட்சம் பேர் அங்கு கூடினார்கள்.

மோசம்

மோசம்

அந்த மார்க்கெட் பகுதிகளில் மிக கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க மக்கள் ஓட தொடங்கி உள்ளனர். இதில் ஒருவர் மீது ஒருவர் மோதி.. பலர் கீழே விழுந்து.. அவர்கள் மீது மக்கள் ஏறி மிதித்து பலர் காயம் அடைந்து உள்ளனர். பலரின் கழுத்து, முகம், நெஞ்சில் ஏறி மக்கள் ஓடிய நிலையில் அங்கு மிகப்பெரிய களேபரமே ஏற்பட்டது. ஆனால் உண்மையில் அதுதான் திடீரென மக்கள் ஓட காரணமா என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தில் நேற்று 150க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.

100 உடல்கள்

100 உடல்கள்

இதில் பலியானவர்களில் 100 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டு உள்ளது. இந்த உடல்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. 49 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. இதனால் அருகில் இருக்கும் ஜிம்மிற்கு உடல்கள் மாற்றப்பட்டு உள்ளன. 40க்கும் மேற்பட்டோருக்கு நேற்று ஒரே நேரத்தில் நெரிசல் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டது.

 மாரடைப்பு

மாரடைப்பு

ஒருவர் மீது ஒருவர் மோதிய நிலையிலும், பலரின் நெஞ்சு மீது ஏறி மக்கள் ஓடிய நிலையிலும், 40க்கும் மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இவர்களுக்கு அங்கிருந்த மக்கள் அவசர சிகிச்சை அளித்த காட்சிகள் வெளியாகி உள்ளன. பலியான பெரும்பாலானோர் 40 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 20 -30 வயதை சேர்ந்த பெண்கள் பலர் இந்த சம்பவத்தில் பலியாகி உள்ளனர்.

ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ்

150க்கும் அதிகமான ஆம்புலன்ஸ்கள் நேற்று சம்பவம் இடத்திற்கு வந்தன. இருப்பினும் அங்கிருந்து மக்களை உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. 1 மக்கள் வரை அங்கு கூடி இருந்த காரணத்தால், ஆம்புலன்ஸ் நகர்ந்து செல்வதும் கஷ்டமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு வீடியோக்கள், போட்டோக்கள் வெளியாகி இணையத்தை உலுக்கி உள்ளது. தென்கொரியாவில் நடைபெற்ற மிகப்பெரிய ஹாலோவீன் விபத்தாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

English summary
Death toll rises to 149 in Seoul South Korea Stampede during Halloween .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X