அமெரிக்காவில் இருந்து கொத்து கொத்தாக திருப்பி அனுப்பப்படும் இந்திய மாணவர்கள்: என்ன தான் தீர்வு?
ஹைதராபாத்: அமெரிக்காவுக்கு படிக்கச் சென்று உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 16 மாணவர்கள் ஹைதராபாத் விமான நிலையத்தில் 6 மணிநேரம் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 16 மாணவர்கள் கல்லூரிகளில் படிக்க அமெரிக்கா சென்றனர். ஆனால் அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நியூயார்க் நகரில் இருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 16 மாணவர்களும் கடந்த சனிக்கிழமை இரவு ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். ஆனால் அவர்கள் பயணம் செய்த டிக்கெட்டில் பிரச்சனை என்று கூறி மாணவர்களை 6 மணிநேரம் விமான நிலையத்தில் காக்க வைத்துள்ளனர் அதிகாரிகள்.

மேலும் மாணவர்களின் ஆவணங்களை சரிபார்க்க அதிகாரிகள் வழக்கத்திற்கு அதிகமாக நேரம் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் ஸ்ரீநகரில் இருந்து ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்த தெலுங்கானா துணை முதல்வர் முகமது மஹ்மூது அலியிடம் இது குறித்து மாணவர்களின் பெற்றோர் முறையிட்டனர். அவரின் குறுக்கீடால் மாணவர்கள் விமான நிலையத்தில் இருந்து கிளம்ப முடிந்தது.
16 பேரும் நியூயார்க் விமான நிலையத்தோடு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக சிகாகோவுக்கு படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் 14 பேர் விமான நிலையத்தோடு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களிடம் உரிய ஆவணங்கள் இருந்தும் இல்லை என்று கூறி எங்களை திருப்பி அனுப்பி வைத்துவிட்டனர் என்கின்றனர் மாணவர்கள். முன்னதாக கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட 2 கல்லூரிகளில் சேர்ந்த 20 இந்திய மாணவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications