Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா? ஆபத்தின் விளிம்பில் மக்கள்.. இந்தியா முழிச்சுக்குமா?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்கா தற்போது வரலாறு காணாத இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக டெக்சாஸ் மற்றும் நியூ மெக்சிகோ பகுதியில் எற்பட்டிருக்கும் வெள்ளம் நூற்றுக்கணக்கான உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. முன்கூட்டியே கணிக்கப்படாததால்தான் இது இவ்வளவு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தேசிய வானிலை சேவை துறையில் அமெரிக்கா ஆட்குறைப்பு செய்ததுதான், பேரிடர்களை முன்கூட்டியே கணிக்க முடியாததற்கான காரணமாக சொல்லப்படுகிறது.

டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர் அரசு துறைகளில் பணியாற்றுபவர்களை வேலையிலிருந்து அனுப்பும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியிருந்தார். சம்பளம் கொடுத்து கட்டுபடியாகவில்லை என்றும், செலவுகள் அதிகரிக்கிறது எனவும் இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறியிருந்தார்.

weather us climate change Delhi

ஆட்குறைப்பு செய்த டிரம்ப்

ஆட்குறைப்பு என தனி அமைச்சகத்தையே(DOGE) அவர் உருவாக்கியிருந்தார். இதை தலைமையேற்று நடத்தியவர்தான் எலான் மஸ்க். அதாவது அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை 15% குறைக்க வேண்டும் என்பதுதான் அவரின் விருப்பம். அதற்கேற்ப, சில அதிரடி நடவடிக்கைகளில் மஸ்க் இறங்கினார். அமெரிக்க வெளியுறவுத் துறையில் 1,300க்கும் அதிகமானோரும். அமெரிக்க கல்வித்துறையில் 1,400 ஊழியர்களும் இப்படி மற்ற துறைகளில் சேர்ந்தது 1.28 லட்சம் ஊழியர்கள் வேலையை விட்டு அனுப்பப்பட்டனர்.

குறிப்பாக வானிலை துறையில் சுமார் 600 பேர் வேலையிலிருந்து கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். இது கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்க மக்களிடையே பாதிப்புகளாக எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

வெள்ளக்காடான டெக்சாஸ்

அதாவது, வானிலையை முன்கூட்டியே கணிப்பதிலும், அதை மக்களுக்கு சரியான நேரத்தில் எடுத்து சொல்வதிலும் தோல்வி ஏற்பட்டிருக்கிறது. இதனால் டெக்ஸாலில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து மக்களுக்கு முன்கூட்டியே தெரியவில்லை. அதாவது டெக்ஸாஸின் 'ஹில் கன்ட்ரி' பகுதியில் 4 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை வெறும் சில மணி நேரங்களில் கொட்டி தீர்த்திருக்கிறது. சில இடங்களில் 38 செ.மீக்கும் அதிகமாக மழை பதிவாகி இருக்கிறது.

1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை

கெர்வில்லே உள்ளிட்ட பகுதியில் வெறும் மூன்று மணி நேரத்தில் 25 செ.மீ மழை கொட்டி தீர்த்திருக்கிறது. ஆஸ்டினுக்கு மேற்கே உள்ள பகுதியில் 5 மணி நேரத்தில் 35 செ.மீ அளவுக்கு மழை பொழிந்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி டெக்ஸாஸில் மட்டும் சுமார் 100க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் குறித்து முன்னெச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாததே இந்த உயிரிழப்புகளுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதுபோன்ற கனமழை 1,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

நியூயார்க்கும் விடுபடவில்லை

நியூயார்க்கிலும் இதேபோன்று கனமழை பதிவாகியிருக்கிறது. அதாவது ஜூலை 14ம் தேதி நியூயார்க்கின் 'சென்ட்ரல் பூங்கா', ஸ்டேட்டன் தீவு, மன்ஹாட்டன் செல்சியா, நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு 5 செ.மீக்கும் அதிகமாக மழை பொழிந்திருக்கிறது. நியூயார்க் நகரின் ஜூலை மாதத்தின் மொத்த சராசரி மழையின் அளவு வெறும் 11.4 செ.மீ தான். ஆனால், ஜூலை 14ம் தேதி வெறும் ஒரு மணி நேரத்தில் 5 செ.மீக்கும அதிகமாக மழை பெய்திருப்பது, மாதத்தின் சராசரி மழையின் அளவில் பாதியை பொழிந்திருக்கிறது என்று அர்த்தம்.

சில பகுதியில் 6.7 செ.மீ என மழை பெய்திருக்கிறது. கடந்த 1908ம் ஆண்டுக்கு பின்னர் இந்த அளவுக்கு மழை பொழிந்தது இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது.

இந்தியாவுக்கு என்ன பிரச்சனை?

சரி இதற்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? தொடர்பு இருக்கிறது. அமெரிக்கா தற்போது சந்தித்திருப்பது காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளைத்தான். இந்தியா இதேபோன்ற இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டால் அதன் பாதிப்புகள் மிக மோசமாக இருக்கும். ஏனெனில் அமெரிக்காவில் இருப்பதை போன்ற உள்கட்டமைப்புகள் இந்தியாவில் கிடையாது.

உடனடியாக நடவடிக்கை தேவை

மட்டுமல்லாது மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை வெட்டி சுருக்கி வருகிறது. குறிப்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தில் போதுமான ஊழியர்கள் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. எனவே மத்திய அரசு விழித்துக்கொண்டு, வானிலை மையம் உட்பட பல்வேறு துறைகளில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை போதுமான அளவுக்கு தேர்வு செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, இந்தியா எதிர்வரும் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+