சூப்பர் எர்த்.. அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அசத்தலான விஷயம்! ஏலியன்கள் இருக்கும் போல
வாஷிங்டன்: அமெரிக்காவின் விண்வெளி ஆய்வாளர்கள் சூப்பர் எர்த் எனப்படும் புதிய கோளை கண்டுபிடித்துள்ளனர். இதில் உயிர்கள் இருக்கிறதா என்பது பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன.
இதுவரை ஏலியன்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் சூப்பர் எர்த் எனப்படும் சூப்பர் பூமியில் ஏலியன்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அமெரிக்காவின் ஹார்வர்ட் மற்றும் ஸ்மித் ஸோனியன் மையத்தின் ஆய்வாளர்கள் குழு சூப்பர் எர்த்தை-ஐ கண்டுபிடித்திருக்கிறது. பூமியை விட இரு மடங்கு பெரியதாக இது இருக்கிறது. அதே நேரம் இந்த கோள், அதன் நட்சத்திரத்திலிருந்து சனிக்கோளைவிடவும் அதிக தூரத்தில் சுற்றுகிறது. பொதுவாக பூமியை விட இரண்டு மடங்கு பெரியதாக இருக்கும் கோள்களை சூப்பர் எர்த் என்று அழைப்பார்கள். இக்கோள்களில் அதிக அளவு ஆய்வுகள் நடத்தப்படும்.
பெரும்பாலும் இது பாறையால் ஆன கோளாக இருக்கும். ஆனால், சில நேரங்களில் வாயு கோளாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. எர்த் என பெயர் வைத்திருக்கிறார்களே அப்படி எனில் பூமியில் இருப்பதை போல அங்கும் உயிர் இருக்குமா? என்று கேள்வி எழலாம். ஆனால் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் 100% இருக்கிறது என்று சொல்லவிட முடியாது. இருப்பினும் தொடர் ஆய்வுகள் செய்தால் ஏதாவது தகவல் கிடைக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த வகை கோள்கள் கொஞ்சம் அதிசயமானவை. ஏனெனில் இவை சூரிய குடும்பத்தில் கிடையாது. ஆனால் இப்போது விஞ்ஞானிகள் மற்றொரு விஷயத்தை கண்டுடிபித்திருக்கிறார்கள். அதாவது சூரிய குடும்பத்திற்கு வெளியில் சூப்பர் எர்த் கோள்கள் மிகச் சாதாரணமானது என்பதுதான் அது. சூப்பர் எர்த் கோள்களை ஆய்வு செய்வதன் மூலம் நமக்கு பல விஷயங்களுக்கு உண்மை கிடைக்கும். குறிப்பாக பூமியில் உள்ள மனிதர்களால் அங்கு வசிக்க முடியுமாக என்பதை இக்கோள்களை ஆய்வு செய்வதன் மூலம் தெரிந்துக்கொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மனிதர்களால் ரொம்ப காலத்திற்கு பூமிக்குள்ளேயே அடைந்து கிடக்க முடியாது. நிச்சயம் நமக்கு இன்னொரு பூமி தேவைப்படும். ஏனெனில் அடுத்தடுத்த காலங்களில் பூமி வாழ்வதற்கே ஏற்ற இடமாக இல்லாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications