For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

50 ஆண்டுகளுக்கு முன்பே.. பூமிக்கு விசிட் அடித்த ஏலியன்கள்? வானில் திடீரென தோன்றும் அந்த மர்ம பொருள்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கடந்த 50 ஆண்டுகளாக நீடிக்கும் பறக்கும் தட்டுகள் குறித்த மர்மத்திற்கு ஒரு வழியாக முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பிரபஞ்சத்தில் நம்மைப் போலவே வேறு யாராவது உள்ளனரா என்பதைக் கண்டறியத் தீவிர ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா இதுபோன்ற ஆய்வுகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ஏலியன்கள் உள்ளதா, அவை எப்படி இருக்கும், பூமிக்கு ஆபத்தா என்பவை எல்லாம் குறித்துக் கண்டறிய நாசா தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக UFOs என்பவை குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

என்னங்க இது? ஏலியன் உண்மையிலேயே வந்துருக்குமோ! செவ்வாயில் கண்டறியப்பட்ட விண்கலம்? அதிர்ச்சியில் நாசா என்னங்க இது? ஏலியன் உண்மையிலேயே வந்துருக்குமோ! செவ்வாயில் கண்டறியப்பட்ட விண்கலம்? அதிர்ச்சியில் நாசா

 பறக்கும் தட்டுகள்

பறக்கும் தட்டுகள்

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள் எனப்படும் UFOs குறித்த மர்மம் நீட்டித்தே வருகிறது. ஏலியன்கள் நமது பூமியில் ஏற்கனவே உள்ளன என்ற ஒரு தரப்பினர் கூறும் கூற்றுக்கு இந்த பறக்கும் தட்டுக்கள் தான் முக்கிய ஆதாரமாக உள்ளது. இது குறித்து இப்போது முறையான தீவிர ஆய்வை நடத்த நாசா முடிவு செய்துள்ளது. தற்போது நம்மிடம் இருக்கும் தரவுகளைக் கொண்டு பறக்கும் தட்டுகள் குறித்துக் கூடுதல் ஆய்வுகளை மேற்கொள்ள நாசா முடிவு செய்துள்ளது. மர்ம தட்டுக்குள் குறித்து இருக்கும் வீடியோக்கள் ஆய்வு செய்து அதன் உண்மைத்தன்மையைக் கண்டறியவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 நாசா

நாசா

இது குறித்து நாசாவின் அறிவியல் பணித் தலைவர் தாமஸ் ஜுர்புச்சென் கூறுகையில், "நாங்கள் இது குறித்து தீவிர ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். அனைத்து தரவுகளையும் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என்பது எங்கள் முன் இருக்கும் சவால்!" என்று தெரிவித்தார். பறக்கும் தட்டுக்குள் எனப்படும் UFA குறித்த மர்மமான காட்சிகளை விளக்க நாசா எடுக்கும் முதல் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

 வானியற்பியல் ஆய்வாளர்

வானியற்பியல் ஆய்வாளர்

பறக்கும் தட்டுகள் குறித்த ஆய்வை முன்னெடுக்க வானியற்பியல் ஆய்வாளர் டேவிட் ஸ்பெர்கெல் தலைமையில் குழு அமைக்கப்படும் என நாசா தெரிவித்துள்ளது. பறக்கும் தட்டுகள் குறித்த வீடியோக்கள் பல்வேறு விளக்கங்களைக் கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து டேவிட் ஸ்பெர்கெல் கூறுகையில், "இந்தக் கேள்விகள் அனைத்தையும் நாம் எச்சரிக்கை உடன் அணுக வேண்டும். இந்த பிரபஞ்சத்தின் 95% என்னவென்று நமக்குத் தெரியாது என்று என்னால் சொல்ல முடியும். எனவே, வானவியலில் நாம் செல்ல வேண்டிய தூரம் மிக மிக அதிகமாக உள்ளது" என்றார்.

 பறக்கும் தட்டுகள் அதிகரிப்பு

பறக்கும் தட்டுகள் அதிகரிப்பு

கடற்படை உளவுத்துறையின் துணை இயக்குநர் ஸ்காட் ப்ரே, கடந்த மாதம், UFOகள் பற்றி விளக்கம் அளித்து இருந்தார். 2000களுக்கு பின்னர், ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பயிற்சிப் பகுதிகளில் மர்மமான பறக்கும் பொருள்கள் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் கடற்பகுதியில் பதிவு செய்யப்பட்ட பறக்கும் தட்டுகள் குறித்த தகவல்களும் கடந்த மாதம் சேகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 மர்மம்

மர்மம்


இவ்வளவு பெரிய பேரண்டத்தில் நமது பூமியில் மட்டுமே மனிதர்கள் உள்ளனர் என்பதை அனைத்து ஆய்வாளர்களும் நம்பத் தாயாராக இல்லை. பூமியைப் போலவே வேறு கிரகங்களில் ஏலியன்கள் இருக்கும் வாய்ப்புகள் மிக மிக அதிகம் என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. ஏலியன்கள் மனிதர்களுக்கு வந்தால், அவர்கள் நம்முடன் நட்புடன் இருப்பார்களா அல்லது நம்மை அழிப்பார்களா என்பதும் புதிராகவே உள்ளது.

English summary
Nasa sets a scientific study of these mysterious sightings in the sky: (பறக்கும் தட்டுகள் குறித்து ஆய்வு செய்யச் சிறப்புக் குழு அமைப்பு) NASA announced plans to form a scientific team to explore UFOs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X