ஒரு நிமிடம் கூட ஓய்வு கிடைக்காது.. அஜித் பங்கேற்கும் துபாய் 24 ஹவர்ஸ் ரேஸ்.. இவ்வளவு கஷ்டமா!
துபாய்: நம்ம அஜித் குமார் இப்போது கார் ரேஸில் கலந்து கொள்ளத் தீவிரமாகத் தயாராகி வருவது அனைவருக்கும் தெரியும். ஆனால், பலருக்கும் அவர் பங்கேற்பது என்ன ரேஸ்.. அது எவ்வளவு கடினம்.. இதில் அஜித்தின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பது தெரியாது.. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அஜித் குமார் இப்போது துபாயில் நடைபெறும் ரேஸில் பங்கேற்கிறார். இதற்காக அவர் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளார். சமீபத்தில் துபாயில் நடந்த பயிற்சி போட்டியில் கூட அவரது கார் விபத்தில் சிக்கிய வீடியோ வெளியாகியிருந்தது.

அவர் கார் ரேஸில் பங்கேற்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் கூட அது என்ன ரேஸ்.. அஜித் இந்தளவுக்குப் பயிற்சி பெற என்ன காரணம் என்பது பலருக்கும் தெரியாது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
துபாய் 24 ஹவர்ஸ் ரேஸிங்:
நம்மில் பலருக்கும் எஃப் 1 கார் ரேஸ் குறித்துத் தெரியும்.. இந்த எஃப் 1 கார் ரேஸை எஃப்.ஐ.ஏ என்ற அமைப்பு நடத்துகிறது. அதுபோல நெதர்லாந்து நாட்டை சேர்ந்த கிரெவென்டிக் என்ற அமைப்பு நடத்துவது தான் இந்த 24 hours endurance ரேஸ்.. எஃப் 1 கார் ரேஸை போலவே இதுவும் பல்வேறு சுற்றுக்களாக உலகெங்கும் பல இடங்களில் நடத்தப்படும்.
அதன் ஒரு பகுதியாகவே துபாய் ஆட்டோட்ரோமில் என்ற மோட்டார்ஸ்போர்ட் சர்க்யூட்டில் இப்போது ரேஸ் நடைபெறுகிறது. எஃப் 1 ரேஸில் டிரைவர்கள் சர்க்யூட்டை (பந்தய பாதை) குறிப்பிட்ட லேப்கள் சுற்றி வந்தால் போதும். யார் முதலில் வருகிறார்களோ.. அவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். ஆனால், இந்த endurance ரேஸில் அப்படி இல்லை.
வேறுபாடு:
குறிப்பிட்ட லேப் என்று இல்லாமல்.. ஒரு நாள் முழுக்க அதாவது 24 மணி நேரமும் காரை ஓட்டிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு நிமிடம் கூட கேப் விடாமல் காரை ஓட்ட வேண்டும். 2019ல் வெளியான பிரபல ஹாலிவுட் திரைப்படமான Ford vs Ferrariல் இதைத் தான் காட்டியிருப்பார்கள். ஆனால், அது பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் 24 ஹவர்ஸ் ஆஃப் லீ மான்ஸ் என்ற ரேஸை அடிப்படையாகக் கொண்டது. இந்த 24 ஹவர்ஸ் ஆஃப் லீ மான்ஸ் ரேஸில் யாருக்கு எல்லாம் அழைப்பு விடப்படுகிறதோ.. அவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். ஆனால், துபாய் ரேஸில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
ஓ யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாமா அப்போது ஈஸியாக தான் இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள்.. உலகில் மிகவும் கஷ்டமான ரேஸில் ஃபார்மேட்களில் ஒன்று இந்த 24 மணி நேர டிரைவிங் ரேஸ். இதில் கலந்து கொள்ளவே தனியாக லைசன்ஸ் தொடங்கிப் பல கட்டுப்பாடுகள் இருக்கிறது. அதைப் பூர்த்தி செய்வோரின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன்படியே அஜித்தின் ரேஸ் அணி இதில் பங்கேற்கிறது
முக்கியம்:
இந்த ரேஸிங்கின் தொடக்கத்தில் எந்த காரை ஒரு டீம் ஓட்ட தொடங்குகிறதோ.. அதைக் காரை தான் கடைசி வரை ஓட்ட வேண்டும். காரை ரிப்பேர் செய்து கொள்ளலாம் என்றபோதிலும், நடுவிலேயே எதாவது பிரச்சினை அல்லது சேதாரம் ஏற்பட்டு காரை இயக்கவே முடியாத சூழல் ஏற்பட்டால் அவ்வளவுதான்! ரேஸில் இருந்து வெளியே வேண்டும். எனவே, காரை வேகமாக ஓட்டுவது மட்டுமின்றி அதை எப்படி கையாள்கிறோம் என்பதும் இதில் முக்கியமானதாக இருக்கும்.
தல தான் கேப்டன்:
மேலும், இந்த ரேஸிங்கில் ஒவ்வொரு டீமுக்கும் 2 முதல் 4 டிரைவர்கள் இருப்பார்கள். அதில் ஒருவர் கேப்டனாக இருப்பார். கேப்டன் தான் பிரதான டிரைவர் என்று அர்த்தம். குறைந்தபட்சம் 60-70% நேரத்தை கேப்டன் தான் ஓட்ட வேண்டும். அதாவது 14 முதல் 18 மணி நேரம் கேப்டன் தான் ஓட்ட வேண்டும். அஜித் குமார் ரேஸிங் டீம் கேப்டனாக அஜிக் உள்ள சூழலில் அவர் தான் பெரும்பாலான நேரத்தில் கார் ஓட்ட வேண்டி இருக்கும். மற்ற நேரத்தில் மட்டுமே இதர டிரைவர்கள் காரை ஓட்ட வேண்டும்.
மாற்று வீரர்கள் காரை ஓட்டும் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம் என்ற போதிலும் பொதுவாக இதுபோன்ற சூழல்களில் டிரைவர்கள் யாரும் தூங்கி ஓய்வெடுக்க மாட்டார்கள். இது தங்கள் ரிதமை பாதிக்கும் என்பதால் 24 மணி நேரமும் தூங்காமலேயே இருப்பார்கள்.
புள்ளிகள் எப்படி கணக்கிடப்படும்:
24 மணி நேரத்தில் எவ்வளவு லேப்பை கடக்கிறார்களோ அதன் அடிப்படையிலேயே புள்ளிகள் வழங்கப்படும். அதாவது 24 மணி நேரத்தில் 70 லேப்களை கடக்கிறார்கள் என்றால் 0.7* 70 என்ற கணக்கிட்டே புள்ளிகள் கணக்கிடப்படும். மேலும், பல நகரங்களில் இந்த ரேஸ் நடக்கும் சூழலில் அதன் அடிப்படையில் புள்ளிகள் கணக்கிடப்படும்.












Click it and Unblock the Notifications