ஆபீசுக்கு போகாமலேயே மாத சம்பளம், போனஸ்.. அதுவும் 10 வருஷத்துக்கு.. இரவெல்லாம் பாட்டு.. யார் பாருங்க
பாங்காக்: வேலை கிடைத்தால், தாய்லாந்தில்தான் கிடைக்கணும் என்று பலருக்கும் ஆசை துளிர்த்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணம், அந்த நாட்டில், பணியாளர்களுக்கு அலுவலகங்களில் தரப்படும் சலுகைகள்தான்.. என்ன நடக்கிறது தாய்லாந்தில்?
இணையதளம்: கடந்த வாரம் ஒரு செய்தி இணையதளம் முழுக்க தீயாய் பரவியது.. தாய்லாந்து நாடடில் பாங்காக்கில் அந்த மார்க்கெட்டிங் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். மார்க்கெட்டிங் கம்பெனி என்பதால், எந்நேரமும் பரபரப்பாக இயங்க வேண்டிய சூழலாகும்.
அதனால், அங்கிருந்த ஊழியர்களில் ஒருவர், எப்போதும் மிகவும் பிஸியாக வேலை செய்து கொண்டிருக்கிறோம்... டின்னர் சாப்பிட கூட காதலியுடன் ஒன்றாக வெளியே போக முடியவில்லையே? என்று நொந்துபோய் தன்னுடைய கஷ்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.. இந்த ஊழியர் புலம்பியது, அந்த கம்பெனி முதலாளி வரைக்கும் போய்விட்டது. உடனே அந்த முதலாளி, ஊழியர்களின் நலனை மேம்படுத்தவும், ஊழியர்களை குஷிப்படுத்தவும் ஏகப்பட்ட சலுகைகளை அறிவித்துவிட்டார்.

சம்பளம்: குறிப்பாக, ஊழியர்கள், தங்கள் காதலியுடன் நேரம் செலவிட வசதியாக, சம்பளத்துடன் லீவு வழங்கப்படும் என்று முதல் அறிவிப்பாக வெளியிட்டுவிட்டார்.. அதுமட்டுமல்ல, தேவையான நாட்கள் லீவு எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு வாரத்துக்கு முன்பே, அதற்கான தகவல் தெரிவிக்க வேண்டும்..
உங்கள் நலனே எங்கள் நலன். .. நீங்கள் மகிழ்ச்சியுடன் இருந்தால் தான், நிறுவனத்தில் வேலை நன்றாக நடக்கும். அதனால்தான் இப்படியொரு முடிவை எடுத்துள்ளோம் என்று அந்த தங்கமான முதலாளி சொல்லி உள்ளாராம்.
உயர்ந்த பதவி: இதுஒருபுறமிருக்க, ஒரு பிரபலமான கம்பெனியில் உயர்ந்த பதவி கிடைத்தும்கூட, அரசு அதிகாரி ஒருவர் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் இருந்துவிட்டார்.. இந்த ஊழியரை பற்றிதான், செய்திகள் பரவி வருகின்றன.
தாய்லாந்து நாட்டின் ஆங் தோங் (Ang Thong) என்ற மாகாணத்தில், பேரிடர் தடுப்பு மற்றும் தணிப்பு துறையில், பணியாற்றி வருகிறார் இந்த அரசு அதிகாரி.
ஆனால், ஆபீசுக்கே போவது கிடையாதாம்.. அப்படியே எப்போதாவது போனாலும், முக்கியமான பத்திரங்களில் கையெழுத்து போடுவதற்காக மட்டுமே செல்வாராம். இரவு நேரங்களில் அங்குள்ள கிளப்பில் பாடகராக உள்ளார் இந்த அதிகாரி.. அதனால், எந்நேரமும் கிளப்பிலேயே இருப்பாராம்.. இரவில் கிளப்புக்கு சென்றுவிட்டு, பகலில் தூங்குவதுதான் இவரது வேலையாக இருந்து வந்துள்ளது.
அதிகாரிகள்: இந்த விஷயம், அந்த அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்து, விஷயத்தை உயர் அதிகாரி வரை கொண்டு சென்றுள்ளனர்.. அவரோ, மேயர் வரை புகார் தெரிவித்தார்.. மேயரோ, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி குறித்து கண்டனத்தை வெளிப்படுத்தினார்.
எப்போது மேயர் கோபப்படுகிறாரோ, அப்போது மட்டும் ஆபீசுக்கு போவாராம் அந்த அரசு அதிகாரி.. கிளப்பில் பாடகராக இருப்பதில் ஆர்வம், தன்னுடைய பணியில் அவரால் காட்ட முடியவில்லை.. வேலை பார்ப்பதையே விரக்தியாக உணர்ந்திருக்கிறார். இப்படியே 10 வருட காலம் ஓட்டியிருக்கிறார். இவர் 10 வருடம் வேலைக்கு போகாமல் இருப்பது, எப்படியோ வெளியுலகுக்கு தெரிந்துவிட்டது.
சம்பளம், போனஸ்: இதற்கெல்லாம் காரணம், மேலதிகாரிகள் சிலர், இவருக்கு சலுகைகளை வழங்கியிருக்கிறார்கள். இதை வைத்தே 10 வருடம் ஆபீசுக்கு போகவில்லை. ஆனால், இதைவிட பெரிய ஷாக் என்னவென்றால், இந்த 10 வருட காலமும் இவருக்கு சம்பளமும் கிடைத்துள்ளது.. வருடா வருடம் போனஸூம் கிடைத்திருக்கிறது.
சம்பளமும், போனசும் வாங்கி கொண்டு, எப்படி ஒருவரால் அலுவலகத்துக்கு வராமல் இருக்க
முடியும்? என்று பலரும் அதிர்ச்சியுடன் கேட்டு வருகிறார்கள். உடனடியாக இவரை வேலையில் இருந்து நீக்குங்கள், உழைப்பவர்கள் எல்லாம் முட்டாள்களா? என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்களாம்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications