பேருதான் குழந்தைசாமி... ஆனா செம உஷாரு... எப்படி தெரியுமா?
பார்ப்பதற்கு குழந்தையின் முகம் போல் இருக்கும் கிம் ஜங், பயங்கர உஷார்பேர்வழியாக இருக்கிறார்.
Recommended Video

சிங்கப்பூர்: சிங்கப்பூருக்கு வந்த கிம் ஜங் உன் ரெடிமேட் டாய்லெட்டை கொண்டு வந்ததற்கான காரணம் தெரிந்துவிட்டது.
சிங்கப்பூரின் செந்தோசா தீவில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், வடகொரியா அதிபர் கிம் இடையேயான முதல் முறையாக பேச்சுவார்த்தை இன்று காலை நடைபெற்றது. சிங்கப்பூர் வந்த கிம் ஜங் பேனா, பென்சில் கொண்டு செல்வது போல் டாய்லெட்டையும் கொண்டு வந்தார்.
அவர் அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த போதிலும் அங்கிருந்த டாய்லெட்டை பயன்படுத்தாமல் கையுடன் கொண்டு வந்த டாய்லெட்டையே பயன்படுத்தினார். இதற்கு காரணம் இதுவாக இருக்கலாம் என தெரியவந்தது.

கவனம்
கிம் ஜங் வேறு ஒரு நாட்டின் மாநாட்டில் முதல் முறையாக இன்று பங்கேற்றுள்ளார். எப்போதும் சுய பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்துவார். எந்த சூழலிலும் எதிரிகளிடத்தில் தங்களது தகவல்கள் கசிந்துவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்துவார்.

ஏற்பாடு
தன்னை பற்றிய ஏதாவது தகவல் எதிரிக்கு கிடைத்துவிட்டால் தன்னை தாக்குவது எளிது என்ற முன்னெச்சரிக்கை அதிகம். எனவே எங்கு சென்றாலும் சிறப்பு உணவுகளை மூட்டை கட்டிக் கொண்டு செல்வார். ஆனால் டிரம்புடனான சந்திப்புக்கு பிறகு அவர் ஏற்பாடு செய்த உணவையே உட்கொண்டார்.

டாய்லெட்
எனினும் தன் உடலில் இருந்து வெளியேறும் மலம், சிறுநீர் உள்ளிட்ட கழிவுகளில் இரு்நது எந்த வித தகவலும் யாருக்கும் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக தான் கொண்டு சென்ற டாய்லெட்டை பயன்படுத்தினார். இ்நத கழிவுகள் மூலம் தனது உடல்நிலை குறைப்பாடு குறித்து எதிரிகள் அறிந்து கொள்ள முடியும்.

உடல்நல பாதிப்பு
உடல் கழிவுகளில் இருந்து ஒருவரது உடல்நிலை பாதிப்பு, சமீபத்தில் அருந்திய உணவு, நோய்கள், என்னென்ன கெட்டப்பழக்கங்கள் உள்ளிட்டவற்றை நல்ல திறமையான மருத்துவரால் அறிந்து விட முடியும் என்பதே கிம்மின் அச்சம். எனவே யாரும் தனக்கு எதிராக செயல்பட்ட விடக் கூடாது என்பதால் இதுபோன்று கிம் செய்கிறார் என கூறப்படுகிறது. பார்ப்பதற்கு குழந்தை போல் முகம் இருந்தாலும் கிம் படு உஷார் பேர்வழிதான் போங்க...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications