காற்றில் பறக்கிறது ட்ரம்ப்பின் மானம்.. பேபி பலூனில் அழுமூஞ்சு அதிபரின் முகம்
அதிபர் ட்ரம்ப்பின் பேபி பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ்: திரும்பவும் நாட்டு மக்களிடம் சிக்கிக்கிட்டார் விமர்சன நாயகன் டொனால்ட் ட்ரம்ப்.
பொழுது விடிஞ்சு பொழுது போனா ஏதாவது ஒரு விவகாரம், அல்லது சர்ச்சை பேச்சு, அல்லது கண்டன விமர்சனம் என ஏதாவது ஒன்றில் அதிபர் ட்ரம்ப் பெயர் உலகம் முழுவதும் வறுபட்டு வருகிறது.

ஏடா கூட ட்ரம்ப்
ஏடாகூடமாக பேசுவது, யாரையாவது எதையாவது சொல்லி பின்னர் வாங்கி கட்டிக் கொள்வது, ட்விட்டரில் கன்னாபின்னாவென்று பதிவிடுவது இப்படிப்பட்ட ட்ரம்ப் செய்கையினால்தான் அவருக்கு தொடர்ந்து நாட்டு மக்கள் உள்ளிட்ட உலக மக்களிடம் இருந்து கேலி, கிண்டல்கள் எழுந்து வருகின்றன.

மெகா சைஸ் பலூன்
அப்படித்தான் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள செயல்பாட்டாளர்கள் சிலர் ட்ரம்பை விமர்சிக்கும் பொருட்டு விளையாட்டுக்காக ஒரு காரியத்தை செய்துள்ளனர். முதலில் ட்ரம்ப்பை ஒரு அழுமூஞ்சு குழந்தைபோல வடிவமைத்தனர். பின்னர் அதை ஒரு மெகா சைஸ் பலூனாக செய்து, லாஜ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கன்வென்சன் சென்டரில் பறக்க விட்டுள்ளனர்.

மானம் போகிறது
பலூன் பறக்கவிடும்போது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஏனெனில் இந்த நகரில்தான் அடுத்த அரசியல் கூட்டம் விரைவில் நடக்க போகிறதாம். அதற்காக ட்ரம்ப் மானத்தை வாங்க இந்த பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது.
காற்றில் பறக்கிறது
இதற்கு முன்பு டிரம்ப்பின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை எதிர்த்து லண்டனில் பேபி ட்ரம்ப் பலூன் பறக்கவிடப்பட்டது. ‘அப்போது "ட்ரம்பே திரும்பி போ' என்ற முழக்கத்துடன், அவரை கிண்டல் செய்து பலூன்களை பறக்கவிட்டும் அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.அதேபோன்று தற்போது லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது ட்ரம்ப்பின் மானம்!
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications