பணிந்தது பாகிஸ்தான்! இந்தியா- பாக்., சண்டை நிறுத்தம்! மத்யஸ்தம் பேசிய டிரம்ப்? அப்படி பேசியது ஏன்?
டெல்லி: காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் நிலவிவரும் நிலையில் இந்திய நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் முழுமையான மற்றும் உடனடியான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என அவர் கூறிய நிலையில், தற்போது நீண்ட நேரமாக இரு தரப்பினரிடையே மத்தியஸ்தம் செய்வதாக அவர் பதிவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை அழித்தொழிக்க, இந்திய பாதுகாப்புப் படைகள் ஒருங்கிணைந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பெரிய பதிலடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது முக்கிய பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் இதில் ஜெய்ஷ்-எ-முகமது, லஷ்கர்-எ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது.

அந்த இடங்களில் பஹவல்பூர் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது, முரிட்கேவில் லஷ்கர் முகாம் உள்ளிட்டவை அழிக்கப்பட்டன. உளவுத்துறை தகவல்கள் படி, இந்த தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் கூறியிருந்த நிலையில், இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று முன் தினம் இரவு தொடன்கி இன்று அதிகாலை வரை இந்திய ராணுவ மையங்களை இலக்காகக் கொண்டு 15 நகரங்களில் தாக்குதல் நடத்த முயன்றதாகவும், இதில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்கள் அடங்கும் எனவும் ஆனால் இந்த தாக்குதல்களை இந்தியா முறியடித்தது என மத்திய அரசு கூறியது. இதை அடுத்து பாகிஸ்தானின் ஏவுகணைகள் ட்ரோன்கள் இந்தியாவுக்குள் நுழைய முடியாத நிலையில், இந்தியா பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியது.
இஸ்லாமாபாத் கராச்சி, சியால்கோட் உள்ளிட்ட நகரங்கள் இந்தியாவால் தாக்கப்பட்ட நிலையில் இருதரப்பிடையே முழு போர் ஏற்படும் சூழல் உருவானது. இரு தரப்பும் பரபரப்பில் இருந்த நிலையில் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என பல்வேறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நீண்ட நேர இரவு உரையாடலுக்குப் பிறகு அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை இந்தியா பாகிஸ்தான் ஏற்று கொண்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் உடனடியான மற்றும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன், பொது அறிவு மற்றும் சிறந்த இண்டலிஜென்ஸை அந்த நாடுகள் கொண்டுள்ளது. இந்த விஷயத்தில் புரிந்து கொண்டதற்கு நன்றி" எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
— Donald J. Trump (@realDonaldTrump) May 10, 2025
கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை அமெரிக்கா இந்த விஷயத்தில் தலையிடாது. இது நாடுகளும் விரைவில் போர் நிறுத்தத்தை அறிவிக்கும் என தான் நம்புவதாக ட்ரம்ப், கூறிய நிலையில் தற்போது தாமே இரு நாடுகள் இடையே பேசியதாகவும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதற்கு நன்றி என டொனால்ட் டிரம்ப் மாறி மாறி பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications