வாஷிங்டன்னில் திடீர் ராணுவ அணிவகுப்பு.. ட்ரம்ப் உத்தரவால் அதிர்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  வாஷிங்டன்னில் திடீர் ராணுவ அணிவகுப்பால் அதிர்ச்சி- வீடியோ

  வாஷிங்டன்: தலைநகர் வாஷிங்டன்னில் திடீரென பெரிய அளவிலான ராணுவ அணிவகுப்பை நடத்த உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

  போர் வெற்றிக்கு பிறகு அதை கொண்டாடும் வகையில்தான் வாஷிங்டன்னில் அமெரிக்க ராணுவம் அணிவகுப்பு நடத்துவது வழக்கம். ஆனால் இப்போது ஏன் அதை நடத்த ட்ரம்ப் கூறியுள்ளார் என்பது புரியாத புதிராக உள்ளது.

  எதிர்க்கட்சிகள், இந்த நடவடிக்கையை ராணுவ ஆட்சி நடைபெறும் நாடுகளுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்துள்ளன.

  உறுதியான செய்தி

  உறுதியான செய்தி

  வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைதான், முதலில், ட்ரம்ப் அரசு இதுபோன்ற ஒரு அணி வகுப்பை நடத்த உள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது. இப்போது வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் சாரா சேண்டர்ஸ் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். அமெரிக்காவின் ராணுவத்தினர் தினசரி உயிரை பணயம் வைத்து பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு ட்ரம்ப் ஆதரவாக இருப்பார் என்று, சாரா கூறியுள்ளார்.

  ஆரம்ப கட்டம்

  ஆரம்ப கட்டம்

  ராணுவ அணி வகுப்பின்போது, பொதுமக்கள் அதை பார்வையிட்டு ராணுவத்தினரை பாராட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனுக்கு நிகழ்ச்சி பற்றிய முழு விவரமும் இன்னும் தெரிவிக்கப்படவில்லையாம்.

  பாரீஸ் அணிவகுப்பு

  பாரீஸ் அணிவகுப்பு

  கடந்த ஆண்டு ஜூலை மாதம், பாரீசில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பை பார்த்த பிறகுதான் அமெரிக்க அதிபருக்கு இந்த எண்ணம் வந்திருக்க வேண்டும் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதை பார்த்த பிறகு, இதுதான் நான் பார்த்த சிறந்த அணி வகுப்புகளில் ஒன்று. இதை மிஞ்சும் அணி வகுப்பை அமெரிக்கா நடத்தும் என ட்ரம்ப் கூறியிருந்ததை ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.

  பணம் வேஸ்ட்

  பணம் வேஸ்ட்

  வட கொரியா போன்ற நாடுகளில்தான் இதுபோன்ற அணி வகுப்புகள் நடைபெறுவது உண்டு. மேலை நாடுகளில் அவ்வாறு கிடையாது. "பணத்தை வீண் செய்யும் வேலை இது. இது நமது ஸ்டைல் கிடையாது" என்கிறார் அமெரிக்க நாடாளுமன்றத்தின், ராணுவ சேவை கமிட்டி மெம்பரான ஜாக்கி ஸ்பெய்ர். வளைகுடா போர் முடிவில் அமெரிக்காவில் இதுபோன்ற ராணுவ அணி வகுப்பு 1991ல் நடத்தப்பட்டது. அதன்பிறகு ட்ரம்ப் இதுபோன்ற ஒரு அணி வகுப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  US President Donald Trump has asked the Pentagon to organise a large military parade in the nation's capital.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற