மனைவியோடு பந்தாவாக வந்து வாக்களித்தார் டொனால்ட் ட்ரம்ப்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் நியூயார்க்கில் வாக்களித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை ஆரம்பித்து இன்று அதிகாலை வரை தொடர்ந்து நடைபெறுகிறது. சுதந்திர கட்சி சார்பில் ஹேரிஜான்சன், பசுமை கட்சி சார்பில் ஜில்ஸ்டீன், அரசியல் சட்ட கட்சி சார்பில் டேரல் ஹேஸ்ட்ல், சுயேச்சையாக இவான் மேக்முலின் ஆகியோரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்றபோதிலும், குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் நடுவே நேரடி போட்டி நிலவுகிறது.

வாக்குப்பதிவு சூடு பறக்கும் நிலையில், ஹிலாரி கிளிண்டன் நியூயார்க்கில் இந்திய நேரப்படி மாலை 6.45 மணியளவில் வாக்களித்தார். அவரது கணவரும், முன்னாள் அதிபருமான பில் கிளிண்டனும் வாக்களித்தார். அதன்பிறகு சுமார் 3 மணி நேர இடைவெளியில் டொனால்ட் ட்ரம்ப் மேன்ஹேட்டன் பகுதியிலுள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தார். அப்போது அவரது மனைவி மெலானியாவும் வந்திருந்து, அதே மையத்தில் வாக்களித்தார்.
And here's @realDonaldTrump getting booed even harder on the way out... #ilovenewyork pic.twitter.com/rkXSPklrul
— Harrison Greenbaum (@harrisoncomedy) November 8, 2016
திரும்பி செல்கையில், வாக்களிக்க வந்தவர்களுக்கு கை கொடுத்தார். சிறுவர்களிடம் ஹை-பை செய்தார். அப்போது வாழ்த்து கோஷங்களும், எதிர்ப்பு கோஷங்களும் ஒரு சேர ஒலிப்பதை கேட்க முடிந்தது.












Click it and Unblock the Notifications