‘உலகிலேயே உடலில் அதிக துளைகளைக் கொண்ட மனிதர்’... சூனியக்காரன் என திருப்பி அனுப்பிய துபாய்!
துபாய்: உலகிலேயே உடம்பில் அதிக துளை கொண்ட மனிதர் என்று அழைக்கப்படும் ரோல்ப் புச்சோல்ஸ், துபாய் வந்தபோது அவரை நாட்டுக்குள் அனுமதிக்காமல் அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டனர்.
அவருக்கு ஏன் துபாய்க்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
53 வயதான ரோல்ப், ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவர் தனது நெற்றி, காது, மூக்கு, உதட்டில் மொத்தம் 453 துளைகளைப் போட்டு அணிகலன்களை அணிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்தான்புல் சென்றார்...
துபாய் விமான நிலையம் வந்த ரோல்ப் அங்கேயே நிறுத்தப்பட்டு பின்னர் இஸ்தான்புல் கிளம்பிய விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்டு விட்டார்.

தோல்வி...
துபாயில் உள்ள ஒரு ஹோட்டலின் நிகழ்ச்சிக்காக வந்திருந்தார் ரோல்ப். அவர் திருப்பி அனுப்பப்படுவதைத் தவிர்க்க ஹோட்டல் நிர்வாகம் கடுமையாக முயற்சித்ததாம். ஆனால் அது தோல்வியிலேயே முடிந்ததாம்.

முற்போக்கு நாட்டிலேயே...
வளைகுடா நாடுகளிலேயே சற்று முற்போக்கான நாடாக கருதப்படுவது துபாய். ஆனால் அங்கு இப்படி நடந்திருப்பதை அனைவரையும வியக்க வைத்துள்ளது.

மீண்டும் வருவேன்...
இதற்கிடையே தான் மீண்டும் துபாய் வருவேன் என்று ரோல்ப் கூறியுள்ளார். அவரது உடமைகள் இன்னும் துபாயில்தான் உள்ளன.

நான் சூனியக்காரனா..?
இதுகுறித்து அவர் கூறுகையில், என்னை சூனியக்காரன் என்று துபாய் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் நினைத்து விட்டனர். இதனால்தான் அவர்கள் என்னை தடுத்து அனுப்பியுள்ளனர். ஆனால் நான் மீண்டும் துபாய் வருவேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றார் ரோல்ப்.

கின்னஸ் சாதனை...
உண்மையில் ரோல்ப் ஒரு தகவல் தொழில்நுட்ப நிபுணர் ஆவார். 2012ம் ஆண்டு இவர் உலகிலேயே உடலில் அதிக துளை கொண்ட மனிதர் என்று கின்னஸ் அமைப்பு அங்கீகரித்து இவருக்கு சான்றிதழ் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications