மாயமான மலேசிய விமானத்தை தேடும் பொறுப்பை ஏற்ற டச்சு நிறுவனம்
சிட்னி: மாயமான மலேசிய விமானத்தை தேடும் பொறுப்பை நெதர்லாந்தைச் சேர்ந்த நிறுவனமான ஃபக்ரோ ஏற்றுக் கொண்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. ஆனால் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும், அதில் இருந்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அறிவித்தது.
இதையடுத்து தெற்கு இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பணி மாதக்கணக்கில் நடந்து வருகிறது.

ஆஸ்திரேலியா
மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி ஆஸ்திரேலியா தலைமையில் நடந்து வருகிறது. ஆனால் இது வரை விமானத்தின் பாகம் எதுவும் கிடைக்கவில்லை.

கடலுக்கு அடியிலும்
விமான பாகங்களை தேட ஆளில்லா நீர்மூழ்கி கப்பலும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் பயனில்லாமல் போனது.

உண்மையாகவே
விமானத்தை மாதக் கணக்கில் தேடியும் பாகமோ, பயணிகளின் உடலோ, உடைமையோ எதுவும் கிடைக்கவில்லை. அதனால் விமானம் அங்கு தான் விழுந்து மூழ்கியதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

12 மாதங்கள்
கடலுக்கு அடியில் 60 ஆயிரம் சதுர அடியில் விமானத்தை தேட 12 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

ஃபக்ரோ
விமானம் குறித்த தகவல் எதுவும் இதுவரை கிடைக்காத நிலையில் விமானத்தை தேடும் பொறுப்பு நெதர்லாந்தைச் சேர்ந்த ஃபக்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு
ஃபக்ரோ நிறுவனம் நிபுணர்கள் உதவியுடன் விமானத்தை தேடும் என்று ஆஸ்திரேலிய துணை பிரதமர் வாரன் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications