ஏலியன்களை நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது.. ஏன் தெரியுமா? விஞ்ஞானிகள் சொல்லும் வித்தியாசமான காரணம்
வாஷிங்டன்: சூரியனுக்கு அருகில், போதுமான தூரத்தில் பூமி இருப்பதால் இங்கு தண்ணீர், நீர் வடிவில் இருக்கிறது. எனவே உயிர்கள் வாழ்கின்றன. இதேபோல மற்ற சூரியனுக்கு அருகில் இருக்கும் கிரகங்களிலும் உயிர்கள் (ஏலியன்கள்) இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதற்கான தேடல்கள் நடந்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், நம்மால் கடைசி வரை ஏலியன்களை கண்டுபிடிக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பூமியில் உள்ள கடற்கரையில் உள்ள மணல் துகள்களை விட, பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகம். நமது சூரியனும் ஒரு நட்சத்திரம்தான். ஒவ்வொரு நட்சத்திரத்தை சுற்றியும் கோள்கள் வலம் வரும். நட்சத்திரத்திலிருந்து போதுமான தூரத்தில் உள்ள கோள்களில் உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இதனை 'வாழக்கூடிய மண்டலங்கள்'(Habitable zone) என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இப்படியான கிரகங்களை கண்டுபிடிக்க நாம் தீவிரமாக முயன்று வருகிறோம். ஆனால் இந்த முயற்சிகள் மூலம் ஏலியன்களை கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமான விஷயம் என்று கூறும் விஞ்ஞானிகள், மீறி கண்டுபிடித்தாலும் அதை நம்மால் நேரில் பார்க்க முடியாது எனவும் தெரிவித்திருக்கின்றனர்.
இதற்கு காரணம் 'வாழக்கூடிய மண்டலங்கள்' என்பது ஒரு கானல் நீர் போன்றது. அதாவது நமது சூரியன் இளமையாக இருந்தபோது அது 70% அளவுக்கு மட்டுமே வெளிச்சத்தையும், வெப்பத்தையும் கொடுத்து வந்தது. அப்படியெனில் நமக்கு முன்னால் இருக்கும் வெள்ளி கிரகத்தில் தண்ணீர், நீர் வடிவத்தில் இருந்திருக்கிறது. அங்கு உயிர்கள் வாழ்வதற்கான அனைத்து சூழல்களும் இருந்தன. உயிர்கள் வாழ்ந்திருக்க கூட வாய்ப்பு இருந்திருக்கிறது. ஆனால் இன்று சூரியன் வளர்ந்திருக்கிறது.
எனவே சூரிய குடும்பத்தில் மிகவும் வெப்பமான கிரகமாக வெள்ளி மாறியிருக்கிறது. இன்றைய தேதியில் அங்கு உயிர்கள் இருக்க சுத்தமாக வாய்ப்பே இல்லை.
இது எப்படி நடந்தது? ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் பிறப்பு, இறப்பு என்கிற கட்டம் இருக்கிறது. அப்படியெனில் அது வளர்கிறது என்று அர்த்தம். சூரியனும் அப்படித்தான். இன்னும் சில லட்சம் வருடங்கள் கழித்து, சூரியன் இப்போது இருப்பதை விட பெரியதாக வளர்ந்திருக்கும். எனவே செவ்வாய் கிரகத்தில் துருவ பகுதியில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகி, தண்ணீராக மாறும். அதேபோல வியாழன் மற்றும் சனி கிரகத்தின் நிலவுகளிலும் இதே மாற்றம் ஏற்படும்.
சிம்பிளாக சொல்வதெனில் பூமி, உயிர்கள் வாழ லாயக்கி அற்ற கோளாக மாறி, செவ்வாய் கிரகமும், வியாழன், சனியின் துணை கோள்களும் 'வாழக்கூடிய மண்டலங்களாக' மாறும்.
இதேதான் பிரபஞ்சம் முழுக்க நடக்கும். நாம் அனுப்பி வைக்கும் விண்கலன்கள், சில நூற ஆண்டுகள் கழித்து ரொம்ப தூரத்தில் உள்ள ஒரு கோளில் உயிர்கள் இருப்பதை எப்படியோ கண்டுபிடித்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த உயிர்களை பார்ப்பதற்காக நாம் அங்கு போவதற்குள் அந்த கிரகம், 'வாழக்கூடிய மண்டலங்கள்' என்கிற இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கும். கிரகத்தின் நட்சத்திரம் வளர்வதால் இந்த மாற்றம் ஏற்படும்.
இது ஒரு கானல் நீர் மாதிரியான விளையாட்டு. அங்கு ஏலியன்கள் இருப்பதாக நமக்கு தோன்றும். ஆனால் போய் பார்ப்பதற்குள் அங்கு எல்லாம் அழிந்து போய் இருக்கும். கடைசி வரை நம்மால் ஏலியன்களை கண்டுபிடிக்கவே முடியாது என்று அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக அவர்கள் எழுதியுள்ள கட்டுரை ஒன்று 'தி ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னலில்' வெளியாகியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications