அதிகாலையிலேயே அதிர்ந்த ஆப்கானிஸ்தான்.. கட்டடங்கள் குலுங்கியதால் நடுங்கிப்போன மக்கள்

Subscribe to Oneindia Tamil

காபுல்: ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கத் தொடங்கின. இதனால் பொதுமக்கள் கடும் பீதியடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் திடீரென இன்று அதிகாலை சரியாக 4.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.

Earthquake Afghanistan

இந்த நிலநடுக்கமானது ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மாகாணம் பஹ்லன் நகரில் இருந்து 164 கிலோமீட்டர் தொலைவில் 75 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது. தலைநகரமான டெல்லி உள்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+