நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை வாபஸ்.. மக்கள் நிம்மதி
வெல்லிங்டன்: நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அது வாபஸ் பெறப்பட்டது.
கெர்மடெக் தீவு என்பது மக்கள் அதிகம் வசிக்காத பகுதியாகும். இந்த தீவுகளுக்கு வடக்கே இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 7.4-ஆக பதிவானது. இதையடுத்து அந்த இடத்தை சுற்றியுள்ள மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
இதனால் நியூசிலாந்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ பொருட்சேதமோ ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடல் பகுதியில் பேரலைகள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
பசிபிக் பெருங்கடல் பகுதியில் ரிங் ஆப் பயர் பகுதியில் அமைந்திருக்கும் நியூசிலாந்தில் ஆண்டுக்கு 14 ஆயிரம் முறை நில அதிர்வு ஏற்படும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications