ஆஃப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.3ஆக பதிவு.. அச்சத்தில் பொதுமக்கள்!
காபூல்: ஆஃப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 5.49 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காபூல் அருகே 85 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவாகியுள்ளது.
அண்மைக் காலமாக ஆஃப்கானிஸ்தான் நாட்டில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 22ஆம் தேதி ஆஃப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் பாகிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்துள்ள இந்துகுஷ் பிராந்தியத்தில் மார்ச் 22ஆம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக பதிவனாது.
இந்த பயங்கர நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருந்தாலும் கூட அண்டை நாடான பாகிஸ்தானில்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி, குவெட்டா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பெரிய நகரங்கள் நிலநடுக்கத்தால் குலுங்கின. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியதால் பதறிப்போன மக்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
பாகிஸ்தானில் இந்த நிலநடுக்கத்துக்கு ஏராளமானோர் பலியாகினர். அதேபோல் பலரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்துக்கு 3 பேர் பலியானதாகவும், 50-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் சீனாவில் உணரப்பட்டது
இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் காபூல் அருகே 85 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 5.49 மணியளவில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் பொருட்கள் சேதம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக ஆஃப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications